நேற்றைய அம்பாறை தாக்குதல் அம்பலத்துக்கு வரும் உண்மைகள்…
அன்றுமுதல் இள்றுவரை தமதுதரப்பு இழப்புகள் அழிவுகளில் மட்டுமல்ல, தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தவொரு செய்திகளையும் பொய்யாகவும் புழுகாகவும் தெரிவித்துவிட்டு பின்பு உண்மைகள் அம்பலத்துக்கு வருகின்ற போது அதற்கு ‘ராஐதந்திரம், சாணக்கியம்” எனக்கூறி அசடுவழிவதில் வன்னிப்புலிகளுக்கு நிகர் வன்னிப்புலிகள் தான். அன்றுமுதல் நேற்றைய அம்பாறை தாக்குதல் வரை…
உதாரணமாக மாவிலாறு அணையை மூடிவிட்டு இராணுவத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டு ஓடிவந்த போதும் ‘மாவிலாறு இன்னமும் எமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது, நாம் தாம் மாவிலாறு அணையைத் திறந்து விட்டோமென” வாய்சசவடால் விட்டுவிட்டு பின் உண்மைகள் (இராணுவம் மாவிலாறைக் கைப்பற்றியதும் நீரை அரசே திறந்து விட்டதையும்) வெளிவந்த போதும் ராஐதந்திரமெனக் கூறி அசடு வழிந்தனர்.
இந்த வரிசையில் திருகோணமலையில் மூதூரையும் இழந்த போதும் இதேநிலைமை தான்.. திருகோணமலையில் ஈச்சிலம்பற்று, கட்டைப்பறிச்சான் போன்ற பிரதேசங்களை இழந்த போதும் இதேநிலைமை தான்.. மண்டைதீவை கைப்பற்றி விட்டதாகக் கதைவிட்டு இராணுவத்திடம் மரணஅடி வாங்கிய போதும் இதேநிலைமை தான்.. கடந்தவாரம் சம்பூரை இழந்த போதும் இதேநிலைமை தான்..
நேற்றையதினம் அம்பாறையில் கருணாஅம்மான் தரப்பிடம் தர்மஅடி வாங்கிய போதும் அதேநிலைமை தான்….
நேற்றையதினம் அம்பாறையில் கருணாஅம்மான் தரப்பின் பலமுனைத் தாக்குதலில் படுதோல்வியடைந்து தப்பித்து ஓடிய வன்னிப்புலிகள் ‘அம்பாறையில் விசேட அதிரடிப்படையின் தாக்குல் தமதுதரப்பால் முறியடிப்பென” தமது ஊடகங்கள் மூலம் வீரமுழக்கமிட்டுள்ளனர்.
அடிவாங்கினாலும் இராணுவத்திடம் அடிவாங்குவோமே தவிர கருணாஅம்மான் தரப்பிடமோ மாற்றுஅமைப்புக்களிடமோ அடிவாங்கினோமெனத் தெரிவிப்பதில் தமக்கு கௌரவக் குறைச்சலெனக் கருதும் வன்னிப்புலிகள்…
இருப்பினும் “அதிரடி” இணையத்தளத்திற்கு நேற்றைய அம்பாறைத் தாக்குதல் சம்பந்தமாகக் கிடைத்த முழுவிபரங்களும் (புகைப்பட ஆதாரங்களுடன்)….
அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தமிழீழமக்கள் விடுதலை புலிகளின் இராணுவப் பிரிவின் முற்றுகைத் தாக்குதல் நிறைவுற்றுள்ளது. வன்னிப்புலிகளின் தரப்பில் 15பேர் பலி, பெருந்தொகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் தரப்பில் ஒருவர் வீரமரணம்.
நேற்று அதிகாலை அம்பாறை மாவட்டத்திலுள்ள வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி முற்றுகைத் தாக்குதல் நிறைவுற்றுள்ளது. நேற்று அதிகாலை தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினர் பல முனைகளில் ஏக காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே சில மணிநேரம் உக்கிர மோதல் மூண்டது.
தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலினால் வன்னிப்புலிகளின் பிரதான முகாம்கள் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சியடையத் தொடங்கின. கஞ்சிக்குடியாறு பிரதான முகாம், பாவட்டா முகாம், ரூபேஸ் முகாம், அம்பாறை மாவட்ட வன்னிப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்களின் செவன்திறீபேஸ் முகாம் என்பன தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளிடம் முற்றாக நேற்றுக்காலையில் வீழ்ச்சியடைந்தன. கைப்பற்றிய இடங்களில் தமது நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டு தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினர் தொடர்ந்தும் முன்னேறித் தாக்குதல் தொடுத்தனர்.
தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கவோ, சமாளிக்கக்கூடிய திறனோ, பலமோ வன்னிப்புலிகளிடம் இருக்கவில்லை. தமது நிலைகளைக் கைவிட்டுவிட்டு வன்னிப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தப்பியோடினர். நேற்று நண்பகல் அம்பாறை மாவட்டத்திலுள்ள வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களினால் வழிநடாத்தப்பட்டது. இத் தாக்குதலின்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எச்சேதங்களும் ஏற்படாத வகையில் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தாக்குதல் தொடுத்த தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினர் தமது இலக்கை அடைந்த பின் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
இத்தாக்குதலின் மூலம் தமது இராணுவப் பலத்தின் இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ள இவர்கள் கிழக்கு மாகாணத்தில் வன்னிப்புலிகளின் எப்பகுதிகள் மீதும், எந்நிலைகள் மீதும் தாக்குதல் நடாத்தும் திறன் தமக்கு இருப்பதாக நிரூபித்துள்ளனர்.
அத்துடன் குறைந்தளவான இழப்புடன் ஒருசில மணிநேரத்தினுள் அம்பாறை மாவட்டத்திலுள்ள வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தம் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் கெரில்லாப் போர் முறையிலிருந்து மரபுவழிச் சமரிலும் தம் திறமையைப் பறைசாற்றியுள்ளனர்.
இத்தாக்குதலில் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினரின் தரப்பில் கெப்டன் அந்தோணிப்பிள்ளை ஜீவா (அன்பரசன்) வீரமரணம் அடைந்ததுடன் பொறுப்பாளர் சிந்துஜன், கீதன், அருள், மோகன், ரமேஸ், சின்னக்கண்ணன் ஆகிய போராளிகள் காயமடைந்துள்ளனர். வன்னிப்புலிகளின் தரப்பில் 15பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் வன்னிப்புலிகளிடமிருந்து
ரி56 ரகதுப்பாக்கி -15, BX15.O தொலைத்தொடர்புக் கருவிகள்-03, 40MM பிஸ்டல் 01, RBG– 01,RBGசெல் – 02, Klmg– 01, AK Lmg– 01, கைக்குண்டு – 16, மைன்ஸ் – 12, துப்பாக்கி ரவைகள் – 1100, மகஷின் – 21 என்பன கைப்பற்றப்பட்டதுடன் அவர்களது வாகனங்கள் சிலவும் தீமூட்டி எரிக்கப்பட்டதுடன் முன்னரங்கு நிலைகளும் முகாம்களும் முற்றாகத் தகர்க்கப்பட்டுள்ளன