கன்னத்தின் அழகை அதிகரிக்க.. இதெல்லாம் செய்திடுங்கள்..!!

Read Time:2 Minute, 31 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகை கெடுப்பதை போன்று தோற்றமளிக்கும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும்.

இது போன்ற பாதிப்புகளை தடுத்து, அற்புத பலனை பெறுவதற்கு, இயற்கையில் உள்ள சில வழிகளை பின்பற்றி வந்தாலே போதும்.

கன்னங்களின் அழகை அதிகரிக்க என்ன செய்யலாம்?

தினசரி அதிகாலையில் எழுந்து இயற்கையாக சுத்தமான காற்றை சுவாசித்தாலே, முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பொலிவுகள் மின்னும்.

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து 10 நிமிடங்கள் வாய்க்குள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால் கன்னம் அழகாகும்.

சந்தனம், மஞ்சள் ஆகிய இரண்டையும் பொடி செய்து, முகம், கை, கால்களில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள், பால் மற்றும் வெண்ணெய் கலந்து முகம், கை, கால்களில் தடவி வந்தால், சருமத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும்.

எண்ணெய் தன்மை உள்ள சருமத்தினர், வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சிறிதளவு தேன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.

முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள், வேப்பமரப் பட்டை, மஞ்சள், வெண்ணெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.

துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பரு தொல்லைகள் ஏற்படாது.

முகம் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் இருந்தால், அதற்கு சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர, ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்..!!
Next post பெண்ணிடம் தவறாக நடந்தால் இதுதான் கதி..!! (வீடியோ)