மக்ரோனி – பாலாடைக்கட்டி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்..!!

Read Time:2 Minute, 39 Second

201707171315419216_Most-Macaroni-and-Cheese-Products-Contain-These-Chemicals_SECVPFகுழந்தைகள் விரும்பி விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளில் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் பதாலெட்ஸ் எனப்படும் ரசாயன பொருள் கலக்கப்படுகின்றன. இது பிளாஸ்டிக்கை மிருதுவாகவும் வேண்டிய வகையில் வளைக்கும் தன்மையை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்கை பசையாக்கி ‘பேக்‘ செய்யவும் உபயோகிக்கின்றனர்.

இந்த ரசாயன பொருள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் ‘பேக்‘கிங் செய்வதற்கு முன்பு பிளாஸ்டிக் டியூப் மற்றும் கன்வேயர் பெல்ட்டுகள் வழியாக செல்கின்றன. அவை உணவு பொருட்களில் மறைமுகமாக கலந்து விடுகின்றன.

இந்த நிலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மக்ரோனி மற்றும் பாலாடை கட்டிகளில் தடை செய்யப்பட்ட பதாலெட்ஸ் ரசாயனம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாலாடைக்கட்டி மூலம் தயாரிக்கப்படும் 30 வகையான உணவு பொருட்களின் மீது நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

பதாலெட்ஸ் ரசாயனம் ஆண் வளர்ச்சிக்குரிய டெஸ்ட்டோஸ் டெரோன் எனப்படும் ஹார்மோனை பாதிக்கிறது. இது ஆண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பு வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.

பதாலெட்ஸ் ரசாயன பொருள் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ஆண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்ரோனிலும் பதாலெட்ஸ் எனப்படும் ரசாயனம் கலக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மக்ரோனி மற்றும் பாலாடை கட்டியையும் சேர்த்து குழந்தைகளுக்கு விருப்பமான உணவு தயாரிக்கப்படுகிறது. எனவே மக்ரோனி மற்றும் பாலாடைக் கட்டி உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை சந்தை போட்டு விற்கும் நாடு! ஆண்கள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்..!!
Next post பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கப் போவது யார் தெரியுமா..? ரகசியங்களை போட்டுடைத்த நமீதா..!! (வீடியோ)