மலட்டு தன்மையை நீக்கும் கேரட்: எப்படி சாப்பிட்டால் பலன்?..!!
கேரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.
கேரட்டை எப்படி சாப்பிட்டால் பலனை பெறலாம்?
கேரட் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மைக் கொண்டது. எனவே கேரட்டை பாதியளவு வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கேரட் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த மற்றும் ஜீரணக் கோளாறுகள் குணமாகுவதுடன் எலும்புகள் உறுதியாகும்.
உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதால், முதுமையில் ஏற்படும் கால்சியம் சத்து குறைபாடு, தலைமுடி உதிர்வுகளை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் விட்டமின் இழப்பு, மாதவிலக்கின் போது உண்டாகும் அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு கேரட் சிறந்த தீர்வாக உள்ளது.
கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக அல்லது சமைத்து சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல், சோர்வுநிலை, ரத்தச்சோகை, தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மாலைக்கண் போன்றவை தடுக்கப்படும்.
கேரட்டின் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
கேரட் சாறுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை பிரச்சனையை விரைவில் குணமாக்கும்.
கேரட் ஜூஸை மதிய வேளையில் குடித்து வந்தால் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்தி, சளி, இருமல், வயிற்றுக்கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லை போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
கேரட்டை அடிக்கடி பச்சையாக அல்லது ஜூஸ் செய்து குடித்து வந்தால் அல்சர் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை போக்கி, பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க உதவுகிறது.
கேரட் ஜூஸ் செய்யும் போது, அதன் மேல் தோலை அழுத்திச் சீவாமல், சுத்தமான நீரில் கழுவி, சிறிது நீர் விட்டு அரைத்து அதில் சிறிது சர்க்கரை அல்லது மிளகு, சீரகப் பொடியை சேர்த்து குடிக்கலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating