ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிய நிவின் பாலி..!!
நிவின் பாலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த `சகாவு’ நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, நிவின் தற்போது `ரிச்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், மலையாள சினிமா உலகின் பிரபல ஒளிப்பதிவாளரான ஜோமோன் டி ஜான் இயக்கத்தில் ‘கைரளி’ என்ற பிரம்மாண்டமான படத்தில் நிவின் பாலி நடிக்க இருக்கிறார்.
‘சார்லி’, ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘திரா’ போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய ‘கோல்மால் 4’ கும் ஒளிப்பதிவு செய்து, இந்திய சினிமாவில் முக்கியமானராக விளங்கியவர் ஜோமோன் T ஜான். இவரது இயக்கத்தில் இவரது முதல் படமான ‘கைரளி’ 1979′-ல் மர்மமான முறையில் மாயமாகிய 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் ‘MV கைரளி’ பற்றிய கதையாகும்.
இப்படத்திற்கு தேசிய விருது இயக்குநரும், நிவின் பாலியை வைத்து `சகாவு’ என்ற படத்தை இயக்கியவருமான சித்தார்தா சிவா ‘கைரளி’ படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார். இப்படத்தை நடிகர் நிவின் பாலியின் “பாலி Jr பிக்ச்சர்ஸ்” மற்றும் “ரியல் லைப் ஒர்க்ஸ்” நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
நிவின் பாலியின் ‘தட்டத்தின் மறயத்து’, ‘ஒரு வடக்கன் செல்பி’, ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ உள்ளிட்ட படங்களுக்கு ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கேரளா, கோவா, டெல்லி, குவைத், ஜெர்மனி மற்றும் ஜிபோட்டியிலும் நடக்கவுள்ளது.
மேலும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டிராஜா தயாரிப்பில் `புரொடக்ஷன் நம்பர் 3′ என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவும் நிவின் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை `ரெமோ’ படத்தின் ப்ரோமோ பாடலை இயக்கிய பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating