குட்டித்தூக்கம் போடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

Read Time:4 Minute, 8 Second

201707141440044150_Nap-dropping-health-benefits_SECVPFதூக்கம் மொத்தம் மூன்று வகைப்படும். முதல் வகையில் திட்டமிட்ட நேரத்தில் தூங்குவது, இரண்டாம் வகை, நம்மையும் அறியாமல் அல்லது வேலைப் பளு காரணமாக செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் போது நம்மையும் அறியாமல் தூங்குவது. மூன்றாம் வகை பழக்கப்பட்ட குட்டித்தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்குவது.

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அது புத்தாக்கம் பெறும். அத்துடன் தொடர்ந்து டம்ப் செய்வது போல் அல்லாமல் இப்படி நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும்.

குட்டித்தூக்கம் மூலமாக ஓய்வு எடுக்கும் பட்சத்தில் மன அழுத்தம் குறையும். அத்துடன் ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும். டென்சனை கன்ட்ரோல் செய்தாலே உடலில் ஏற்படுகின்ற முக்கால்வாசி பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.

ஒரு நாள் சரியான தூக்கம் இல்லையென்றாலே நம்முடைய ரத்த நாளங்கள் பாதிப்படையும். இதனால் இதயப் பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற நேரங்களில் இந்த குட்டித் தூக்கம் பெரிதும் உதவியாய் இருக்கும். மூளைக்கு தேவையான ஓய்வு கொடுப்பதால் ரத்த நாளங்கள் சுறுசுறுப்படையும். இதனால் ரத்த ஓட்டமும் சீராகும்.

புதிய நாளை துவங்குவது போன்று குட்டித்தூக்கம் முடிந்து எழும் போது உணர்வீர்கள். இதனால் புதிதாக ஒரு விஷயத்தை துவங்கும் போதோ அல்லது புதிய பாடத்தை படிப்பதற்கு முன்னால் இப்படியான குட்டித்தூக்கம் போட்டால் கூர்ந்து கவனிக்க ஏதுவாக இருக்கும்.

அவ்வப்போது இது போன்ற ஓய்வு நம் மூளைக்கு கண்டிப்பாக தேவை. பல வேலைகளை அடுத்தடுத்து செய்து கொண்டிருக்கும் போது திடீரென எடுக்கப்பட்ட முடிவுகள் நமக்கு சிக்கலையே ஏற்படுத்தும். குட்டித் தூக்கத்திற்கு பிறகு எந்த வித யோசனைகளும் இன்றி மனம் அமைதியாக இருக்கும் என்பதால் அந்நேரத்தில் சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

குறைவான தூக்கம் அன்றைய நாளை கடினமானதாக மாற்றுவதுடன் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவர்களுக்கு வயதான காலத்தில் அல்சைமர் எனப்படும் மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது போன்ற குட்டித்தூக்கம் தொடர்ந்தால் மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தை குட்டித்தூக்கத்திற்கு ஒதுக்குங்கள். அதிக வெளிச்சமில்லாத அமைதியான இடம் இருந்தால் நன்று. 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தூங்கலாம். இதற்கு மேலே சென்றால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும். இரவு நீண்ட நேரம் முழித்திருந்தால் காலையில் எழுவது பிரச்சனையாகும். இதனால் உங்களின் தூக்க சுழற்சி பாதிக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐக்கிய நாடு சபையில் திமிரும் ‘ஜல்லிக்கட்டு’ படம்..!!
Next post நான் மகா கேடி- நமீதா யாரை பார்த்து சொன்னார் தெரியுமா?..!!