லெஸ்பியன் திருமணத்தால் வேலையிழந்த பெண்..! ஊரில் சோகம்..!!

Read Time:2 Minute, 35 Second

capa4Untitled-2-450x251பெங்களூருவில் ஒரு பெண் லெஸ்பியன் திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகையில் வந்த செய்தியை ஒட்டி அந்த பெண் வேலை செய்து வந்த நிருவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

பெங்களூருவில் பழைய பொருட்களை விற்பனை செய்வதற்காக இயங்கும் ஆன்லைன் மீடியா ஒன்றில் பணியாற்றி அந்த பெண் பணி£யற்றி வந்தார். அவர் சமீபத்தில் கோரமங்கலாவில் உள்ள கோவிலில் அந்த பெண்ணும்(25) அவரது தூரத்து உறவினர் பெண்ணும்(21) திருமணம் செய்து கொண்டதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது.

லெஸ்பியன் திருமணம் இந்திய சட்டப்படி செல்லத்தக்கதல்ல. ஒரே இனத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதுமல்ல என்ற கருத்தே இந்திய நாட்டில் உள்ளது.

லெஸ்பியன் திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணை வேலை செய்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கிவிட்டது.

இதுகுறித்து அந்த பெண் கூறும்போது, நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.ஆனால் உறவில் இருக்கிறோம். ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். எனது உறவினர் ஒருவர் வேண்டுமென்றே திருமணம் செய்து கொண்டதாக பரப்பிய செய்தியால் நான் வேலை இழந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

வேலையில் தொடர விரும்பினால் பெற்றோருடன் வந்தால் பேசுகிறோம் என்று அந்த நிறுவனத்தினர் கூறியதாகவும் எனது உறவினர் செய்த காரியத்தால் நாங்கள் இருவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். என்னை வேலையை விட்டு நீக்கியதும் சரியானதல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தண்டனைச்சட்டம் 377வது பிரிவு ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாராவிற்கு பிரபல இயக்குனரிடம் ஏற்பட்ட மனவருத்தம்..!!
Next post என்னதான் செல்லபிராணி என்றாலும் நாய் நாய்தான்..!! (வீடியோ)