பித்தப்பையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை முறைகள்..!!
பித்தப்பை என்பது மேல் வயிற்றில் வலது புறத்தில் கல்லீரலுக்கு வெளியே பித்த திரவத்தை சேமித்து வைக்க கூடிய ஒரு Storage உறுப்பாகும். இதற்கென்று எந்த ஒரு தனி செயல்பாடும் கிடையாது. இதிலிருந்து அமில சுரப்போ, ஹார்மோன் சுரப்போ இல்லை. நாம் சாப்பிட்டவுடன் உணவு செரிமானம் ஆவதற்கு பித்தப்பை சுருக்கி அதில் உள்ள பித்த நீரை குடல் பகுதிக்கு அனுப்பும் பித்தமும் உணவும் கலந்து செரிமானம் நடைபெறுகின்றது.
பித்தப்பையில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது பித்தப்பை கல், அதனால் உண்டாகக்கூடிய பின் விளைவுகள், பித்தப்பை சதை கட்டிகள், பித்தப்பை புற்று நோய், பித்தப்பை (கற்கள் இல்லாமல்) அழுகல் ஆகும். பித்தப்பை கல் பொதுவாக யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகமாக 40 வயதுக்குள் குண்டான பெண்களுக்கு அதிகம் வருகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றமே காரணம். பித்தப்பையில் கல் உருவாகுவதற்கு பொதுவான காரணம் பித்தப்பை சரியாக சுருங்கி விரியும் தன்மையை இழப்பது, கிருமி தொற்று, பித்த நீர் பித்தப்பையில் தங்கி விடுவது போன்ற மூன்றுமே ஆகும்.
பித்தப்பை கற்களால் அஜீரண கோளாறும், வயிற்றின் மேல்புறத்தில் சில நேரங்களில் வலியும் உண்டாகும். சிறு தொந்தரவுகள் கொடுக்கும் போதே பித்தப்பை கற்கள் லேப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுவது நல்லது. ஏனெனில் பித்தப்பை கற்களில் பல பின் விளைவுகள் உண்டாகலாம். பித்தப்பை கற்களின் பின் விளைவுகளில் முக்கியமானது பித்தப்பை சீழ்பிடிப்பது ஆகும்.
இது சர்க்கரை வியாதி, இருதய நோய் உள்ளவர்கள், பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறை வாக உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அதிகமாக வரும். பித்தப்பை சீழ்பிடிப்பதால் குளிர் காய்ச்சல், வாந்தி, வயிற்றில் வலது மேல்புறத் தில் வலி ஏற்படும். உடனடியாக பரிசோதனைகள் செய்து மருத்துவ சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிடில் கிருமி தொற்றால் மஞ்சள் காமாலை, ஜன்னி ஏற்பட வாய்ப்புள்ளது. பித்தப்பை கற்களால் மஞ்சள் காமாலை ஏற்பட்டால் அதற்கும் சேர்த்து வைத்தியம் பார்க்க வேண்டும்.
கணையம் கெட்டு விட்டால் முதலில் அதனை மருந்துகள் மூலம் வைத்தியம் செய்து பிறகு 6 வாரங்கள் கழித்து லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். சிலருக்கு பெரிய சந்தேகம் ஏற்படும். என்னவென்றால் கல்லை மட்டும் எடுத்தால் போதும் என்பதுதான். பித்தப்பை கற்களை பித்தப்பையுடன் எடுத்தால் மட்டுமே முழுமையான தீர்வு ஆகும். பித்தப்பை கற்களை நோயாளியின் அறிகுறிகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் 100% கண்டுபிடித்துவிட் டால் சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்து 4 நாட்களில் வீடு திரும்பலாம்.
10 நாட்களில் அனைத்து வேலைகளை யும் செய்யலாம். நன்றாக இருக்கும் போதே அறுவை சிகிச்சை செய்து பல பின் விளைவுகளை தடுக்கலாம். பித்தப்பை சதை வளர்ச்சியை ஆரம்பத்தில் கண்டுபிடித்து லேப்ராஸ் கோப்பி மூலம் அகற்றிப் புற்று நோய் வருவதை தடுக்கலாம். லேப்ராஸ் கோப்பி மூலம் பித்தப்பை அகற்றுவது அறுவை சிகிச்சை துறையில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று உலக புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர் டாக்டர். குசேரி கூறியுள்ளார்.
Average Rating