பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை..!!

Read Time:5 Minute, 53 Second

201707101142219516_Women-need-to-be-careful-when-removing-unwanted-hair_SECVPFபெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க ஷ்சேவிங், வேக்சிங் அல்லது த்ரட்டிங் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் அதன் முடிவின் விளைவு ஊசி போன்ற முடிகளின் வளர்ச்சி தான் சருமத்தில் ஏற்படுகிறது. இது உங்கள் சருமத்தை முட்கள் போன்று தீவிரமாக்கி விடும். எனவே இந்த ஊசி போன்ற முட்களான முடியின் தீவிரத்தை சரி செய்ய நீங்கள் சரியான ஹேர் ரீமுவல் ட்ரீட்மெண்ட்டை எடுக்க வேண்டும்.

ஹேர் ரீமுவல் ட்ரீட்மெண்ட் என்பது ஒண்ணுமில்லேங்க நீங்கள் செய்யும் வேக்சிங் அல்லது த்ரட்டிங், ஷ்சேவிங் என்பது தான். ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான திட்டமிடுதல் வேண்டும் என்பதே மிகவும் முக்கியம்.

ஒரு சில பேர் ஷ்சேவிங் செய்வர் ஏனெனில் அவர்களுக்கு வேக்சிங் அழற்சியே காரணம். ஆனால் சிலர் ஷ்சேவிங்கில் ஏற்படும் சரும வெட்டு காயங்கள் வேக்சிங்கில் இல்லை என்பதால் அதைச் செய்வர். இந்த முறைகளைச் செய்வதில் எந்த ஒரு விஷயமும் இல்லை ஆனால் இதை தொடர்ந்து எத்தனை முறை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது தான் முக்கியம்.

அதே நேரத்தில் தொடர்ந்து ஹேர் ரீமுவல் செய்வதால் சருமம் பாதிக்கப்படும், அப்படியே விட்டுவிட்டு எப்போதாவது எடுத்தால் முடி வளர்ந்து அதுவே உங்களுக்கு தலைவலியாகிவிடும். உங்கள் சருமத்தை பாதிக்காமல் ஹேர் ரீமுவல் செய்வதை 5 வழிகளில் திட்டமிட போறோம். அதைப் பற்றி தான் நாம் பார்க்க போறோம்.

நீங்கள் ஸ்பெஷல் நிகழ்ச்சி மற்றும் மீட்டிங் செல்லும் போது ஹேர் ரீமுவல் கண்டிப்பாக தேவை. இந்த முக்கியமான நிகழ்ச்சி மற்றும் மீட்டிங் போது விரைவில் ஹேர் ரீமுவல் செய்து கொள்ளுங்கள். சிலர் ஹேர் செய்யாமல் மூடிய ஆடைகளை போட்டு சமாளிப்பர். ஹேர் ரீமுவல் செயல் செய்தால் உங்கள் உடல் புத்துணர்ச்சியை உணரும். எனவே உங்க ட்ரெஸ் என்னவாக வேணா இருக்கட்டும் கண்டிப்பாக குறிகிய காலத்தில் ஹேர் ரீமுவல் செய்து கொண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகளுக்கு செல்லுங்கள்

உடல் முடி வளர்ச்சியை உங்களால் கணிக்க முடியாது. இது உங்கள் ஹார்மோன் மாற்றம் அல்லது உடற்பயிற்சியின் அளவு போன்றவற்றால் கூட நீங்கள் எதிர்பார்க்காத முடி வளர்ச்சி ஏற்படலாம். அந்த சமயத்தில் சரியான திட்டமிடுதலோடு ஹேர் ரீமுவல் செய்து கொள்ளுங்கள் . சலூன் செல்ல நேரம் இல்லாத சமயத்தில் வீட்டிலேயே ஷ்சேவிங் செய்து கொள்ளுங்கள். எல்லா பெண்களும் ஒரு மாதம் முன்னாடி திட்டமிட்டு ஹேர் ரீமுவல் செய்யாமல் நினைத்த நேரத்தில் எந்த வித திட்டமும் இல்லாமல் உடனே செய்கின்றனர் இது முற்றிலும் தவறானது.

உங்கள் மேனி முடியை நீக்க நீங்கள் சுய உணர்வோடு செயல் பட வேண்டும். எப்பொழுது உங்கள் முடியை நீக்க ஹேர் ரீமுவல் தேவை என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும். இதை உங்கள் அழகு பராமரிப்பு திட்டத்துடன் சேர்த்து வகுத்துக் கொள்ளுங்கள். ஹேர் ரீமுவல் ட்ரீட்மெண்ட்டை ஒரு மாதமோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ செய்வது உங்கள் சருமத்தின் தன்மை மற்றும் முடியின் வளர்ச்சியை பொருத்தது.

தொடர்ச்சியான ஹேர் ரீமுவல் உங்கள் சருமத்தை பொருத்தது. எனவே தான் வெவ்வேறு சருமத்தில் அனுபவத்தை உடைய சலூன் எக்ஸ்பட்டிடம் செல்ல பரந்துரைக்கப்படுகிறது. அவர்கள் உங்களுக்கு தொடர்ச்சியான ஹேர் ரீமுவல் திட்டமிடுதலை சொல்வார்கள். அதே நேரத்தில் நீங்கள் தகுந்த கைதேர்ந்த சலூன் எக்ஸ்பட்டிடம் செல்ல வேண்டும் என்பதும் முக்கியம்.

ஹேர் ரீமுவல் ட்ரீட்மெண்ட் உங்கள் உடல் பகுதியை சார்ந்து தான் செய்யப்படும். புருவங்கள் மற்றும் முகத்தில் உள்ள முடி போன்றவற்றிற்கு பிகினி வேக்சிங் சிறந்தது. தொடர்ச்சியான எண்ணிக்கை இதில் குறைக்கப்படுகிறது. இந்த ஒரு வார்த்தையை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள். ஹேர் ரீமுவல் என்பது உங்கள் மேனியை மென்மையாக்க தொடர்ச்சியான எண்ணிக்கைகாக அல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்து அட்டகாசமான ‘சிட்டிங்’ பொசிஷன்கள்…!!
Next post தாய் இல்லாமல் வளர்க்க முடியாததால், மூன்று குழந்தைகளுடன் தந்தை தற்கொலை..!!