பிளஸ்-2 மாணவியை கற்பழித்து ஆபாசபடம் எடுத்து மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது..!!

Read Time:5 Minute, 15 Second

201707101746514754_Auto-driver-arrested-for-molested-to-plus2-girl-in_SECVPFதிருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ரஸ்டின்தாஸ் (வயது 36). இவர் கொடுங்கவிளை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டிவந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.

கொடுங்கவிளை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இவரது ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரையும் ரஸ்டின்தாஸ் தனது ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு அழைத்துச்சென்று வருவார்.

இதனால் அந்த குடும்பத்தினருடன் ஆட்டோ டிரைவர் ரஸ்டின்தாஸ் சகஜமாக பேசி பழகிவந்தார். அந்த மாணவியுடனும் நெருக்கம் காட்டிவந்தார். இதை அந்த குடும்பத்தினர் தவறாக நினைக்காததால் அவர்களது பழக்கம் பலநாட்கள் தொடர்ந்தது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை வழக்கம்போல ரஸ்டின்தாஸ் தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச்செல்வதாக கூறி வீட்டில் இருந்து அழைத்துச் சென்றார்.

பிறகு அந்த மாணவியிடம் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தற்போது அதிகளவு தண்ணீர் விழுவதால் அருவிக்குச் சென்று குளிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி ஆட்டோவிலேயே திற்பரப்புக்கு அழைத்து வந்தார்.

அருவியில் குளித்து மகிழ்ந்தபிறகு அந்த மாணவியை அந்த பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச்சென்ற ரஸ்டின்தாஸ் அவரை அங்கு வைத்து மிரட்டி கற்பழித்துவிட்டார். மேலும் தனது செல்போனில் அந்த மாணவியை ஆபாசமாக படம்பிடித்து வைத்துக் கொண்டார். பிறகு அவரை மீண்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டு விட்டார்.

மேலும் நடந்த விவரங்களை வெளியில் கூறினால் மாணவியையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக ரஸ்டின்தாஸ் மிரட்டியதால் மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறவில்லை.

தொடர்ந்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவியின் நடவடிக்கைகளில் ஆசிரியைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் அவரை தனியாக அழைத்து விசாரித்தனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் சைல்டுலைன் அமைப்பினருக்கும், நெய்யாற்றின்கரை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் ரஸ்டின்தாசை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பல பெண்களிடம் சில்மி‌ஷம் செய்ததாக ஏற்கனவே அவர் மீது வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், திருவனந்தபுரம் அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 27) கூலி தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள ஆதிவாசிகள் கிராமத்தையொட்டி உள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக செல்வது வழக்கம். அப்போது ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த ஒருஇளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கற்பழித்துவிட்டார்.

இதனால் 6 மாத கர்ப்பிணியான அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதால் விபின் அவருடன் பழகுவதை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காட்டாக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபினை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அதை மறைத்துவிட்டு ஆதிவாசி பெண்ணை திருமண ஆசை காட்டி கற்பழித்ததும் தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி..!!
Next post படவாய்ப்பு இல்லாததால் பிக்னியில் ரியாசென்..!!