வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று..!!
வாய்வழியாக பாலுறவு கொள்வது மிகவும் ஆபத்தான கொனோரியா என்ற பாலியல் நோய் தொற்றை உருவாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
மேலும், குறைந்துவரும் ஆணுறை பயன்பாடு அந்தத் தொற்று மேலும் பரவுவதற்கு உதவிகரமாக இருக்கிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யாரேனும் ஒருவர் கொனோரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் தற்போது அதை குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது என்றும், சில நேரத்தில் அதை குணப்படுத்துவது இயலாததது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாலியல் உறவின் மூலம் நோய் தொற்று மிக விரைவாக ஆன்டிபயோடிக்ஸ் எதிரான எதிர்ப்பு செல்களை உடனடியாக உருவாக்குகிறது.
சுமார் 78 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாலியல் உறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
சுமார் 77 நாடுகளின் தகவல்களை பகுப்பாய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், ஆன்டிபயாடிக்ஸுக்கு எதிரான கொனோரியாவின் எதிர்ப்பு பரவலாக இருந்ததை காட்டியது.
உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் டியோடோரா வி, ஜப்பான், ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்று முற்றிலும் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறுகிறார்.
”கொனோரியா ஓர்அறிவான மூட்டை பூச்சியை போல. ஒவ்வொரு முறையும் புதிய வகையான ஆன்டிபயாடிக்ஸை செலுத்தும் போது, அந்த பூச்சி, எதிர்ப்புத்ன்மை கொண்டதாக மாறுகிறது.” என்கிறார் அவர்.
கவலை தரும் செய்தி என்னவென்றால், கொனோரியா தொற்றின் பெரும்பான்மை என்பது ஏழை நாடுகளிலே இருப்பதாகவும், அங்குதான் எதிர்ப்பை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது.
வாய்வழி பாலுறவு
கொனோரியா பிறப்புறுப்புக்கள், மலக்குடல் மற்றும் தொண்டை ஆகியவற்றை பாதிக்கும். ஆனால், இதுதான் தற்போது இறுதியாக சுகாதார அதிகாரிகளை கவலையடைய வைத்துள்ளது.
ஆன்டிபயாடிக்ஸ் தொண்டையின் பின்பகுதியில் பாக்டீரியா உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். அதில் கொனோரியாவின் பிரிவினரும் அடங்கும் என்றும், இது எதிர்ப்பை உருவாக்கும் என்றும் வி கூறுகிறார்.
இதுபோன்ற ஒரு சூழலில் வாய்வழி மூலம் பாலியல் உறவு கொண்டு கொனோரியோ பாக்டீரியாவை இன்னும் செலுத்தும் போது அது வீரியம் கொண்ட கொனோரியாவாக மாறுவதற்கு வழிவகுக்கும்.
ஆணுறை பயன்பாட்டில் சரிவு காரணமாக இந்த கொனோரியா தொற்று வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
கொனோரியா என்றால் என்ன ?
இந்த நோய் தொற்று, நீஸ்ஸீரியா கொனோரியா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
பிறப்புறுப்பு, வாய் மற்றும் ஆசனவாய் ஆகியவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொண்டால் நோய் தொற்று பரவும்.
பாலியல் உறுப்புகளிலிருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் திரவம் வழிதல், சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் மாதவிடாய் காலத்தின் போது ரத்தப் போக்கு ஆகியன இந்நோயின் அறிகுறிகளாகும்.
நோயை காலத்தோடு குணப்படுத்த தவறும் பட்சத்தில் ஆண்மை குறைவு மற்றும் இடுப்பு அழற்சி நோய்க்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண் ஒருவர் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அது அவரது குழந்தையையும் தாக்குதவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எதிர்ப்பு ஆற்றல் மிக்க கொனோரியாவின் பரவல் குறித்து கண்காணிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள உலக சுகாதார நிறுவனம், புதிய மருந்துகளில் முதலீடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
Average Rating