`வேலையில்லா பட்டதாரி-2′ படத்தில் அனிருத் இல்லாதது ஏன்: தனுஷ் விளக்கம்..!!

Read Time:2 Minute, 51 Second

201707090509151679_Dhanush-explains-about-Why-anirudh-is-not-in-VIP-2_SECVPFசவுந்தர்யா ரஜஜினாந்த் இயக்கத்தில் தனுஷ் – அமலாபால் நடித்துள்ள `வேலையில்லா பட்டதாரி-2′ தனுஷ் பிறந்தநாளான வருகிற ஜுலை 28-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர், தனுஷ், கஜோல், சவுந்தர்யா, சீன் ரோல்டன், சமுத்திரக்கனி, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலைப்பிரபு தாணு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதில் பேசிய தனுஷ், `வேலையில்லா பட்டதாரி-2′ ஒரு ஆணாதிக்க படம் இல்லை. `வேலையில்லா பட்டதாரி’ முதல் பாகத்தை போலவே ரசிக்கும்படி இருக்கும். இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெரும். முதல் பாகத்தில் அம்மாவை இழந்த மகன், அவனது வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறான் என்பதை படமாக்கியிருந்தோம். வேலையை இழந்து தவிக்கும் திருமணமான இளைஞன் படும் கஷடங்கள், முயற்சிகள் குறித்து இந்த பாகம் உருவாகி இருக்கிறது. கஜோலின் கதாபாத்திரம் படத்தின் அச்சாணியாக இருக்கிறது. அவரை தவிர்த்து வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றார்.

`வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாவது பாகமும் வரும், அந்த பாகத்திலும் கஜோல் நடிப்பார் என்றும் தனுஷ் கூறியிருக்கிறார்.

இரண்டாவது பாகத்தில் அனிருத், வேல்ராஜ் இல்லாதது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேட்ட கேள்விக்கு பதில் கூறிய தனுஷ், முதல் பாகத்தில் ஒரு இளைஞனுக்கு தேவையான துடிப்பு, உறுதி வேண்டும். எனவே அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம்.

ஆனால் இரண்டாவது பாகத்திற்கு பொறுமையும், வாழ்க்கைக்கு உண்டான தத்துவத்தை உணர்ந்த ஒரு இசையமைப்பாளர் வேண்டும் என்பதால் சீன் ரோல்டனை அணுகினோம். இப்படத்தில் அவரது இசை அருமையாக வந்திருக்கிறது என்றார். அதே போல் ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு சமீர் தாஹிர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்தோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை..!!
Next post சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் சுப்பர் ஸ்டாரின் செல்பி வீடியோ..!!