சிறு வயது கனவு நொடியில் தகர்ந்தது: நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 48 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பிரேசிலில் தனது திருமணத்திற்காக மணப்பெண் ஒருவர் விமானத்தில் வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sao Paulo நகராட்சியை சேர்ந்த Rosemere do Nascimento Silva என்பவருக்கு சிறுவயதில் இருந்தே, தனது திருமணத்தின் போது விமானத்தில் மணப்பெண்ணாக சென்று இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இந்த கனவு நிறைவேறும் விதமாக இவருக்கு திருமணம் நிச்சயமானது, தனது இருப்பிடத்திலிருந்து சுமார் 15 நிமிடங்கள் விமானத்தில் பயணித்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

இதனால், தனது அண்ணன் மற்றும் புகைப்படக்கலைஞர்களுடன் சேர்ந்து விமானத்தில் பயணித்த போது, விமான ஓட்டுநரான தனது அண்ணனின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் நடுவானில் குலுங்கியுள்ளது.

அதன்பின்னர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையில் விழுந்து நொறுங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பலியாகினர், மணமகள் வருவார் என்று காத்திருந்த மணமகன் மற்றும் உறவினர்கள் இந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்து சோகத்தில் மூழ்கினர்.

இந்த திருமணத்திற்காக 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களே… உடல் வலிக்கு இவை தான் முக்கிய காரணம் என தெரியுமா..?..!!
Next post பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததை கூற முடியாத நிலையில் இருக்கிறேன்.. நடிகை அனுயா பகிர்..!!