மற்ற தானியங்களை விட இரும்பு சத்து நிறைந்த திணை..!!

Read Time:2 Minute, 51 Second

201707060834374035_health-benefits-of-thinai-arisi-foxtail-millet_SECVPFதிணை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகை. சாகுபடியில், சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கின்றன. பழங்காலத்தில், முதலாவதாக பயிரிட்டு, மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை திணை தான்.

தற்போதும், சீனாவின் வட மாநிலங்களில் திணை அதிகம் பயிரிடப்படுகிறது. உடல் வலுப்பெற, நம் முன்னோர் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, திணை ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். இதனால், அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று, இவற்றின் பயன்பாடு குறைந்து, அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.

உடல் வலுவிழந்து, பல்வேறு நோய்களின் பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வரும் பொருட்களில் ஒன்று திணை. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேனும், திணைமாவுமே உணவாக இருந்தன. திணையில், உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, திணையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கால்சியத்தின் அளவும், மற்ற தானியங்களை விட அதிகமாக உள்ளது. இதை, களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர்.

மாவாக அரைத்து, சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சி அடைந்தவர்களுக்கு கொடுக்கும் வழக்கம், இன்றும் இருந்து வருகிறது. உடலை வலுவாக்கி, சிறுநீர் பெருக்கும் தன்மையும் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கவல்லது. பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. திணையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது.

இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது. திணை ஓர் அற்புதமான ஆரோக்கியமான தமிழர்களின் பாரம்பரிய உணவு தானியம். தினந்தோறும் ஒருவேளை உணவை திணையால் செய்து உண்டுவந்தால் பல நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷ் புதிய சாதனை! தென்னிந்தியாவில் முன்றாம் இடம்..!!
Next post கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமை..!!