நடுவானில் பிறந்த குழந்தை.. பிறந்த நிமிடத்தில் குழந்தைக்கு கிடைத்த அசத்தல் பரிசு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 41 Second

baby_born001.w245அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் என்ற விமான நிலையத்திலிருந்து டேக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டால்லஸ்க்கு கிறிஸ்டினா பெண்டன் என்ற கர்ப்பிணிப் பெண் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிறிஸ்டினா, விமான பணிப்பெண்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், அவருடன் இணைந்து குழந்தைகள் நல மருத்துவரும், நர்ஸூம் அதே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவரின் உதவியுடன் கிறிஸ்டினா அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதன் பிறகு நியூ ஆர்லியன்ஸ் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமானது தங்கள் நிறுவனம் விமானத்தில் பிறந்த அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விமானத்தில் நடந்த இந்த நிகழ்வை சக பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேளிக்கை வரி: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது – டி.ராஜேந்தர்..!!
Next post சினிமாவுக்காக அஜித் இதை ஒப்புக் கொள்வாரா- விவேகம் படம் எப்படி வரப்போகிறது..!!