நாளை சந்திர கிரகணம்22ல் சூரிய கிரகணம்!

Read Time:1 Minute, 49 Second

Moon.1.jpgநாளை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒரே மாதத்தில் சந்திர கிரகண¬ம், சூரிய கிரகண¬ம் ஆகியவை ஏற்படும் அதிசயம் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில உள்ள பி.எம்.பிர்லா அறிவியல் மைய இயக்குனர் சித்தார்த் கூறுகையில், நாளை (செப்டம்பர் 7) நள்ளிரவு 12.35 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பிக்கும். 8ம் தேதி அதிகாலை 1.08 மணி வரைக்கும் இது நீடிக்கும். இந்த கிரகணத்தை நாடு முழுவதும் தெளிவாக காண¬ முடியும்.

அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய கண்டங்களில் சில பகுதிகளில் இதை காண முடியும். ஆனால், வட அமெரிக்காவில் முற்றிலும் இந்த கிரகணத்தை காண முடியாது.

அப்போது அவர்களுக்கு பகல் நேரம் என்பதால் இதை காணும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்காது. ஈராக், ஆப்கானிஸதான் ஆகிய நாடுகளில் முழு சந்திர கிரகணத்தையும் காண முடியும். அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு மார்ச் 3ம் தேதி ஏற்படும்.

இதேபோல வரும் 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் இதை இந்தியாவில் காண முடியாது. ஒரே மாதத்தில் சந்திரகிரகணமும், சூரிய கிரகணமும் ஏற்படுவது மிகவும் அரிது என்றார் சித்தார்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் “ரிஎம்விபி” வசம்…
Next post ஜனாதிபதி மஹிந்த அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு