அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் “ரிஎம்விபி” வசம்…
அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) வசம். வன்னிப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தப்பியோட்டம். இன்று அதிகாலை அம்பாறை மாவட்டத்திலுள்ள வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவு ஏககாலத்தில் பலமுனைகளில் தொடுத்த தாக்குதலில் இரு தரப்பினருக்குமிடையே கடும்சமர் மூண்டது.
இத்தாக்குதலில் வன்னிப்புலிகளின் முக்கிய முகாம்கள் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்துள்ளது. கஞ்சிக்குடியாறு பிரதேசம் கருணாஅம்மானின் ‘ரிஎம்விபி”யின் பூரண கட்டுப்பாட்டில் வந்துள்ளது
அம்பாறை மாவட்டத்திலுள்ள வன்னிப்புலிகளின் முக்கிய முகாம்களான கஞ்சிக்குடியாறு பிரதானமுகாம், பாவட்டாமுகாம், ரூபேஸ் முகாம், வன்னிப்புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகள் பொறுப்பாளர்கள் உள்ள செவன்திறீபேஸ் எனும் முக்கியமுகாம் என்பன முற்றாக ‘ரிஎம்விபி”யின்; இராணுவப் பிரிவிடம் வீழ்ச்சியடைந்துள்ளன.
இத்தாக்குதலின் போது வன்னிப்புலிகளின் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தப்பியோடியுள்ளனர். இம்முகாம்களிலிருந்த கனரக ஆயுதங்களும் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் வன்னிப்புலிகளுக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
மேற்படி தாக்குதலானது ‘ரிஎம்விபி”யின் மூத்ததளபதி ெஐயம்அண்ணரின் நேரடிவழிகாட்டலில் ‘ரிஎம்விபி”யின் பலமுன்னணித் தளபதிகள் தலைமையிலான போராளிகள் போராடி வருவதாகவும்,, தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவினர் தாம் கைப்பற்றிய இடங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.
இத்தாக்குதல் மூலம் அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடியாறு பாவட்டா போன்ற முக்கிய பிரதேசங்களையும் ‘ரிஎம்விபி”யின் பூரணகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுடன் முன்புபோல் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பி வராமல் தாம் இதுவரை கைப்பற்றிய இடங்களில் தங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
கடந்தவாரம் கட்டைப்பறிச்சான் ஈச்சிலம்பற்று பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை இராணுவம் இருதினங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தில் வன்னிப்புலிகள் வசமிருந்த சம்பூரை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில்..
தற்போது (இன்று) அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசங்களையும் கருணாஅம்மானின் ‘ரிஎம்விபி”யினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது வன்னிப்புலிகளின் தற்போதைய நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும்
அதாவது வன்னிப்புலிகளின் முன்னாள் பதில்தலைவரும் கிழக்குமாகாண தளபதியுமான கருணாஅம்மான் எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் வன்னிப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்றபின் வன்னிப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் தோல்விமுகத்தையே சந்தித்து வருவதாகவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.