கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் உருவாகும் ‘சூறாவளி’..!!

Read Time:2 Minute, 27 Second

201707021213568159_Sooravali-movie-shooting-in-Kerala-forest-area_SECVPFமலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர்தான் இயக்குனர் குமார் நந்தா.

மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான ‘பிரஜூஷா’ கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது..

இதை தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா. கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு வி.ஜி.சஜி ஒளிப்பதிவு செய்ய, ராம் இசையமைக்கிறார். ‘தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ படங்களின் நாயகன் தமன் குமார், ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’ படங்களின் நாயகன் அபி சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மனிஷா ஜித் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அருண் பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒருபக்கம் கஞ்சா விற்கும் கும்பல். இன்னொரு பக்கமோ அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய போலீஸாரும் போட்டிக்கு கஞ்சா விற்கின்றனர். இவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டியும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்தப்படம் விவரிக்கிறது.. கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வரும் ‘ஜூலை 10’ முதல் சுமார் 15 நாட்கள் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அத்தை மகனை மறக்க முடியாததால் திருமணமான 11 நாளில் கணவரை கொன்ற நர்சு..!!
Next post கற்றுக்கொண்ட நல்ல பாடத்திலிருந்து முதலமைச்சருக்கான சோதனை..!! (கட்டுரை)