வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி..!!

Read Time:1 Minute, 45 Second

201706241103390623_Venkat-Prabhu-next-direction-is-PARTY_SECVPFதமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் வெங்கட் பிரபுவும் ஒருவர். அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்லபடியாக அமைந்தது.

அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் `ஆர்.கே.நகர்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ், அதாவது வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு `பார்ட்டி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரோபோ சங்கரை பேசவிடாமல் கலாய்த்த இருவர்! இங்கே பாருங்க..!!
Next post எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? 10 காரணங்கள்..!!