முத்தங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கணுமா?… இத படிங்க…!!

Read Time:4 Minute, 9 Second

www-goldlymedia-com-ng_top-8-s-e-x-positions-every-man-should-know-with-pictures-01-640x304-350x175முத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, நம்முடைய உதடுகள் எவ்வாறு இணைகிறதோ அதேபோன்று தான் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் இரண்டு இதயங்களும் சங்கமித்துக் கொள்கின்றன.

காதலை வெளிப்படுத்தும் இந்த முத்தத்தை சத்தமில்லாத மௌன மொழி என்று கூட சொல்லலாம். காதலர்களுக்குள் எழும் சின்ன சின்ன சண்டைகளுக்கும் கோபத்துக்கும் தீர்வாக இருப்பதுவும் இந்த முத்தம் தான்.

நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்கள் என்றும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். ஆனால் அதில் மென்மை தான் இருக்க வேண்டுமேயொழிய வன்முறை முத்தங்கள் கூடாது.

காதலியிடம் கொஞ்சம் ரொமான்ஸாகப் பேசிக் கொண்டே இருங்கள். அப்போது அவர்களுக்கு உங்கள் மேல் தானாகவே அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிவிடும்.

அந்த சமயத்தில் நீங்கள் கொடுக்கும் முத்தம் அவர்களுடைய மனதில் நங்கூரம் போல் பாய்ந்துவிடும்.

முத்தம் எங்கெங்கு கொடுத்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு, முத்தம் கொடுங்கள்.

உதட்டு முத்தம்

உதட்டில் முத்தம் கொடுப்பது அதிகப்படியான காதலை வெளிப்படுத்தும் உணர்வுகள் மேலோங்கும். இதற்கு நான் உன்னை உயிரைவிடவும் மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தம்.

கைகளில் முத்தம்

கைகளில் கொடுக்கும் முத்தம் மரியாதை நிமித்தமாகக் கொடுப்பது. இந்த முத்தத்தை நண்பர்கள், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள் வயதில் சிறியவர்களுக்குக் கொடுப்பார்கள்.

கண்ணைத் திறந்து கொண்டு முத்தம் தருதல்

கண்களைத் திறந்து கொண்டே உங்கள் காதலி முத்தம் கொடுத்தால், அவர் உங்களை இன்னும் அதிகப்படியாக சந்தோஷப்படுத்த விரும்புவதும் அதேசமயம் உங்களுடைய உணர்ச்சிகளை ரசிக்கிறார் என்று அர்த்தம்

கண்களை மூடி கொடுத்தல்

கண்களை இருவரும் மூடிக்கொண்டு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்துக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்

கன்னத்து முத்தம்

கன்னத்தில் கொடுக்கும் முத்தத்துக்கு நாம் இருவரும் நல்ல காதலர்கள் எகன்பதையும் தாண்டி, நான் உன்னோடு நல்ல நட்பில் இருக்க வேண்டுமென விரும்புவதாக அர்த்தம்.

கழுத்து முத்தம்

தாவிப்பிடித்து, கட்டியணைத்து கழுத்தில் கொடுக்கும் முத்தம் அதிக ரொமான்ஸ் கொண்டதாக இருக்கும். அந்த முத்தத்துக்கு, நீ எனக்கு வேண்டுமென்று அர்த்தம்.

நெற்றி முத்தம்

இது பொதுவான ஒன்று. அனைத்து வயதினரும் இந்த முத்தத்தைப் பரிமாறிக் கொள்வார்கள். வாழ்நாள் முழுவதும் உன்னுடைய அன்பு எனக்கு வேண்டுமென்று அர்த்தம்

கண்களில் முத்தம்

இதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம். இந்த முத்தம் அன்பின் மிகுதியாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகக் கொடுக்கப்படுவதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் நண்பர் செய்த மோசமான காரியம்…!! 11 இலட்சத்தை மட்டுமா பெண் இழந்தார்..?..!!
Next post உங்களுக்கு மூக்கு சுற்றி தோல் உரியுதா? இதோ சில டிப்ஸ்…!!