தேனீக்கள் தாக்கி 22 நாய்கள், எருது சாவு

Read Time:1 Minute, 39 Second

konney.jpgதென்னாப்பிரிக்காவின் நியூகேஸில் நகரில் படையெடுத்து வந்த தேனீக்கள் கொட்டியதில் 22 நாய்கள் இறந்தன. இவற்றில் 12 நாய்க் குட்டிகளும் அடக்கம். நியூ கேஸில் நகரில் விலங்குகள் வதை தடுப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில், மீட்கப்பட்ட ஏராளமான விலங்குகள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையம் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் படையெடுத்து வந்தன.

கொடிய விஷம் கொண்ட அந்த தேனீக்கள் மையத்தில் இருந்த 22 நாய்கள் மற்றும் குட்டிகளை சூழ்ந்து கொண்டு தாக்கின. வலி தாங்க¬முடியாமல் துடித்த 22 நாய்களும் சிறிது நேரத்திலேயே இறந்து போயின. இதேபோல ஒரு எருதையும் தேனீக்கள் கூட்டம் தாக்கியதில் அதுவும் இறந்தது.

இதுவரை இப்படி ஒரு தேனீக்கள் கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை என்று அந்த மையத்தின் தலைவர் பியூலா இங்கபிரட் மிரட்சியுடன் கூறுகிறார்.

தேனீக்கள் படையெடுத்து வந்ததைப் பார்த்த மையத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வீடுகளுக்குள் புகுந்ததால் தப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்கா: மாணவர்களுடன் செக்ஸ்இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை
Next post திருகோணமலை சம்பூரை இராணுவம் கைப்பற்றியதற்கு இலங்கை அரசு விளக்கம்