சிம்புவுக்கு 100 அடி நீள பேனர் வைத்து அசத்திய ரசிகர்கள்..!!

Read Time:1 Minute, 54 Second

201706211725243208_Fans-make-100-feet-length-banner-for-Simbu_SECVPFமுன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும்போதெல்லாம் அவர்களது ரசிகர்கள் அந்த நடிகர்களின் கட்-அவுட்களை பிரம்மாண்டமாக அமைப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சிம்பு நடிப்பில் வருகிற 23-ந் தேதி வெளியாகவுள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்காக 100 அடி நீளத்தில் பேனர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எந்தவொரு நடிகருக்கும் கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைப்பதில் வல்லவர்களான மதுரை ரசிகர்கள்தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். 100 அடி தூரத்திற்கு பிரம்மாண்ட பேனர் ஒன்றை மதுரை நகரின் முக்கியமான வீதிகளின் ஒட்டுவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சானாகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு பாகமாக வெளிவரவுள்ள இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இதில், மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கெட்டப்புகள் முதல் பாகத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் விக்னேஸ்வரன் யார்?..!! (கட்டுரை)
Next post பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்த பெண்.. பயத்தில் அலறியடித்து ஓட்டம்..!! (வீடியோ)