உதவி இயக்குனரை திகைக்க வைத்த ரஜினி..!!

Read Time:3 Minute, 3 Second

201706191522031603_Rajini-shocks-assistant-director-at-2-point-O-shooting-spot_SECVPFரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.ஓ’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற தீபாவளி அன்று பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முரளி மனோகர் என்பவர், ‘2.ஓ’ படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரஜினிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தன்னுடைய பேஸ்புக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது,

”முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க..?”- என்ற அவரின் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்.

”சீக்கிரம் சார்” திக்குமுக்க்காடி, சமாளிப்பாகச் சொன்னேன்.

“ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..?”- என விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டால் என்னதான் செய்ய முடியும்?!

“ஆமா சார்…” – என என்னையுமறியாமல் சொல்லி வைத்தேன்!

“நல்லாப் பண்ணுங்க… (சில நொடிகள் தன் தாடியைத் தடவி யோசித்துவிட்டு) அவசரப் படாதீங்க… உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு… ப்பா… இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலிங்க… சீக்கிரம் பண்ணுங்க” – அச்சு பிசகாத, மிகைப்படுத்தப்படாத அந்த வார்த்தைகள்!

“சரிங்க சார்” – என மீண்டும் எனக்குள்ளிருந்து தன்னியல்பாக வெளிப்பட்ட குரல்.

எனக்குள்ள அந்த நொடி என்னன்னா, எளிமையாச் சொல்லணும்னா, சீக்கிரம் பண்றதா, அவசரப்படாதீங்கன்னு சொன்னதைக் கேட்கிறதான்னு தெரியாம புரியாம திகைச்சு நின்ன தருணம்.

உண்மையா அவர் பேச்சில இருந்த ஒரு அக்கறையை மட்டும் உணர்ந்தேன்! சிலிர்த்தேன்!!

நன்றிகள் #ரஜினி சார்!

ஆயிரமாயிரம் நன்றிகள்; என் குருநாதரும், வழிகாட்டியும், படைப்பாற்றலும், எல்லாத்துக்கும் மேல என் நல விரும்பியுமான, #ஷங்கர் சாருக்கு!!!

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்பகோணத்தில் பெண் கத்தியால் குத்திக் கொலை: கணவர் வெறிச்செயல்..!!
Next post முஸ்லிம் கூட்டமைப்பு: அதிகரிக்கும் சாத்தியங்கள்..!! (கட்டுரை)