ரஜினி படத் தலைப்பில் நடிக்கும் பிரசாந்த்..!!

Read Time:1 Minute, 39 Second

201706181412078203_Prasanth-act-in-Rajini-movie-title_SECVPFசாகசம்’ படத்தை தொடர்ந்த பிரசாந்த் தற்போது ஜீவா சங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இப்படத்திற்கு ‘ஜானி’ என்ற தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘ஜானி’ என்ற தலைப்பில் ரஜினி-ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் கடந்த 1980-ஆண்டு ஒரு படம் வெளியாகியுள்ளது. மறுபடியும் பிரசாந்த் நடிப்பில் ‘ஜானி’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அனன்யா சோனி என்ற பாலிவுட் நடிகை நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை வாரிக்குவிக்கவில்லை. இதையடுத்து, இப்படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டிய அவசியத்தில் பிரசாந்த் கடுமையாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்..!! (கட்டுரை)
Next post இந்தியாவை சுருட்டி மடக்கி முதற் தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது பாகிஸ்தான் ..!!