இனி உலக அதிசயம் ஏழு இல்லை எட்டாம்!.. விஞ்ஞானிகள் அசத்தல்..!!

Read Time:4 Minute, 18 Second

world_athisayam001.w245நியூஸிலாந்தில் 8வது உலக அதிசயம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற அதிசயங்களை காட்டிலும் இந்த உலக அதிசயம் முற்றிலும் மாறுபட்டதாக கருதப்படுகிறது.

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது.

பழைய அதிசயங்கள்

சீனப் பெருஞ்சுவர், எகிப்து பிரமிடுகள், ஈபிள் டவர், தாஜ்மகால் உள்ளிட்டவையே நாம் அறிந்த பெரும்பாலான அதிசயங்களில் சிலவாகும். உலகின் ஏழு அதிசயங்களாக போற்றப்பட்ட இவை எல்லாம் பழைய அதிசயங்களாகவே இருந்தன.

பல அழிந்துவிட்டன

அவற்றில் பல அழிந்து விட்டன. இதனால் புதிய உலக அதிசயங்களை பட்டியல்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஹீரோடோடஸ் மற்றும் காலிமாசஸ் காலத்தை நோக்கி பின்சென்றால், கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை, அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர்.

கிசாவின் பிரமிடு

இவற்றில் கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ போன்ற பிற காரணங்களால் அழிந்துவிட்டன.

8வது அதிசயம்

இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு புதிய அதிசயங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் உலகின் எட்டாவது அதிசயம் நியூஸிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலையானது உள்ளது.

மென் சிவப்பு நிறத்தில்..

இந்த எரிமலை செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி, சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்த மென் சிவப்பு நிறத்தால் அப்பகுதியே ரம்யமாக காட்சியளிக்கிறது.

130 வருடங்களுக்கு முன்னர்..

இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த தோற்ற அமைப்பு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் உருவாகியுள்ளது. எனினும் தற்போது இப்பகுதி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் சுண்டி இழுத்து வருகிறது.இதனால் உலகின் 8வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது.

விரைவில் அறிவிப்பு

ஆனால் இப்பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் விரைவில் இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிமலையால் உருவான ஒரு தோற்றம் முதல் முறையாக உலக அதிசயமாக அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல் நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்..!!
Next post படுக்கையறை உறவு இனிமையாக அமைய 5 விஷயங்கள்..!!