லிப்ஸ்டிக் போடுவதால் நோய் வருமா?..!!

Read Time:2 Minute, 9 Second

201706161221438587_lipstick._L_styvpfஇன்றைய பெண்கள் அவர்கள் இளம் பெண்களாக இருக்கட்டும், நடுத்தர வயதினராக இருக்கட்டும் ஏன் சிறுமிகள் கூட லிப்ஸ்டிக் போடும் வழக்கம் இருந்து வருகிறது. உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

லிப்ஸ்டிக்கில் கலந்துள்ள ரசாயனங்கள் அவர்களது உடலில் கலந்து பக்க விளைவுகளும், நோய் தொற்றுகளையும் உண்டாக்குவதாகவும், இது அவர்களுக்கே தெரியாமல் புற்றுநோய் உருவாகுவதால் பின்னாளில் அவர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை வரும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கூந்தலுக்கு போடும் ஷாம்பு, கண்ணுக்கு போடும் மை ஆகியவற்றிலும் ரசாயனம் இருந்தாலும் உதட்டுக்கு பூசப்படும் லிப்ஸ்டிக்கில் கிட்டத்தட்ட 33 ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இந்த ரசாயனங்கள் மிக எளிதாக நம் உடலுக்குள் சென்று புற்றுநோய் ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பெண்களின் உதடுகள் இயற்கையாகவே அழகாக இருக்கும் போது ஏன் லிப்ஸ்டிக்கை போட்டு அழகை கெடுத்து கொள்ள வேண்டும் என்றும், அது மட்டுமின்றி சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது போல் காசு கொடுத்து ஏன் புற்றுநோயை விலைக்கு வாங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பெண்களுக்கு அறிவுறித்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையறை உறவு இனிமையாக அமைய 5 விஷயங்கள்..!!
Next post இணையத்தில் வைரலாகும் குட்டி பாப்பாவின் வீடியோ..!!