சுய இன்பத்தில் இல்லை சுய நலம்… மாறாக மேம்படுமே உடல் நலம்..!!
சுய இன்பம்.. நிறையப் பேருக்கு இது பிடிக்காத விஷயமாக இருக்கலாம். ஆனால் பலரும் இதை விரும்பு கடைப்பிடிக்கவே செய்கிறார்கள். இதில் உடல் நலக் கேடு இருப்பதாக இதை பிடிக்காதவர்கள் கூறினாலும், அப்படியெல்லாம் இல்லை என்பதே டாக்டர்களின் கூற்றாக உளளது.
நமது உடல் நலனை கட்டுக்குள் வைத்திருக்கவும், பல நல்லதை ஏற்படுத்தவும் இந்த சுய இன்பப் பழக்கம் உதவுகிறதாம். மூக்கடைப்பை இது சரி செய்கிறதாம். செக்ஸ் வைத்துக் கொள்வதால் மட்டுமல்ல, சுய இன்பத்தாலும் கூட சளித்தொல்லை, மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் போன்றவை சரியாகிறதாம்.
ஈரானைச் சேர்ந்த தாப்ரிஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரான டாக்டர் சினா செரின்டன் என்பவர் கூறுகையில், நமது மூக்கும், இனப்பெருக்க உறுப்புகளும் கிட்டத்தட்ட நேரடித் தொடர்பு கொண்டவையாக உள்ளன. எனவே மூக்கடைப்பு ஏற்படும்போது செக்ஸ் வைத்துக் கொண்டால் அந்த சமயத்தில் மூக்கடைப்பு நன்றாக விலகுவதை உணரலாம். எனவே அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு முற்றிலும் நீங்குகிறது. மேலும் சளித்தொல்லையும் அகலும் என்றார் சினா.
நேரடி செக்ஸ் மட்டுமல்ல சுய இன்பப் பழக்கமும் கூட மூக்கடைப்புக்கு நல்ல மருத்துவமாகும் என்பது இவரது வாதம்.
அதேபோல ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம் என்ற நரம்பியல் வியாதிக்கும் சுய இன்பப் பழக்கம் நல்ல வைத்தியமாக திகழ்கிறதாம். அதாவது இந்த நரம்பியப் பிரச்சினையைக் குறைக்க சுய இன்பப் பழக்கம் அல்லது செக்ஸ் உதவுகிறதாம்.
ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் இந்த ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் இந்த லெக் சின்ட்ரோம் பிரச்சினையை நிரந்தரமாக சரி செய்வது இயலாத காரியமாகும். அதேசமயம், செக்ஸ் அல்லது சுய இன்பம் மேற்கொள்ளும்போது பெருமளவிலான நிவாரணம் கிடைப்பதாக ஆய்வுப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பப் பழக்கம் வெகுவாக கை கொடுக்கிறதாம். குறிப்பாக ஆர்கஸம் எனப்படும் உச்சத்தை எட்டுவதற்கு சுய இன்பப் பழக்கம் அவர்களுக்கு உதவுகிறதாம். மூன்றில் ஒரு பங்குப் பெண்கள்தான் உறவின்போது ஆர்கஸத்தை இயற்கையாக எட்டுகின்றனர். மற்றவர்களுக்கு செயற்கையான முறையில்தான் அது தூண்டப்பட வேண்டியுள்ளது. எனவே உறவின்போது ஆர்கஸத்தை அடைய சுய இன்பப் பழக்கத்தையும் நாட வேண்டியுள்ளதாம்.
எந்தப் பெண்ணுமே சுய இன்பப் பழக்கத்தை தொடாமல் இருக்க முடியாது. எல்லாப் பெண்களுமே ஏதாவது ஒரு கட்டத்தில் இதை நாடியேதான் தீர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதே டாக்டர்கள் தரும் ஆறுதல் வார்த்தையாகும். பெரும்பாலான பெண்கள் சுய இன்பப் பழக்கத்தின் மூலமாகத்தான் ஆர்கஸத்தை அடைகிறார்களம். மேலும் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த சுய இன்பப் பழக்கம் புத்தெழுச்சி பெற வைப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இப்படி சுய இன்பப் பழக்கத்தால் பல நன்மைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டே டோக்கியோவில் உலகிலேயே முதல் முறையாக சுய இன்பப் பழக்கத்திற்கான பாரையே திறந்துள்ளனர். லவ் ஜூல் என்ற பெயர் கொண்ட இந்த பாரில், சுய இன்பம் தொடர்பான அனைத்து இலவச ஆலோசனைகளும், அதுதொடர்பான கருவிகளின் விற்பனையம் உள்ளது.
Average Rating