சணல் விதையின் மருத்துவ நன்மைகள்..!!

Read Time:2 Minute, 29 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)ஊட்டச்சத்து நிறைந்த சணல் விதையில் விட்டமின் E, மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளது.

எனவே இவ்விதையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், நிறைய நன்மைகளை பெறலாம்.

சணல் விதையின் மருத்துவ நன்மைகள்

புரோட்டீன்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த இந்த சணல் விதை சைவம் சாப்பிடுபவர்களுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது.

தினசரி சணல் விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், அது ரத்த சர்க்கரையின் அளவைக் குறைத்து, அதிக பசியை கட்டுப்படுத்துகிறது.

சணல் விதை எண்ணெய்யில் உள்ள காமா-லினோலினிக் அமிலம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைத்து, ஹார்மோன்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.

சணல் விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு சக்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், கீழ்வாதப் பிரச்சனைகளை குணமாக்குகிறது.

மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் அழற்சி எதிர்ப்பு சக்தி இந்த விதையில் உள்ளது. எனவே இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

சணல் விதையில் உள்ள காமா-லினோலினிக் அமிலம், முடி, சருமம் மற்றும் நகங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது.

சணல் விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் மற்றும் மன அழுத்தத்தை தடுக்கும் எதிர்ப்பு சக்திகள் உள்ளதால், இவ்விரு நோய்களையும் தடுக்க உதவுகிறது.
சணல் விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்?

சணல் விதைகளை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம். விதைகளை முளை கட்டி சான்ட்விச் உடன் சாப்பிடலாம். சணல் விதையின் பால் கூட குடிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஷாலுக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு..!!
Next post நடுவரானதும் ஆளே மாறிப் போன ஜுலி… கடுப்பில் பார்வையாளர்கள்..!! (வீடியோ)