மசாஜ் பார்லரில் விபச்சாரம் நடத்திய வாலிபர் கைது..!!

Read Time:1 Minute, 22 Second

201706131827113855_young-man-arrested-for-prostitution-in-massage-parlor_SECVPFபெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பரங்கி பாளையாவில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அந்த மசாஜ் பார்லருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, அங்கு விபச்சாரம் நடத்தப்படுவது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, விபச்சாரம் நடத்தியதாக கே.ஆர்.புரம் டி.சி.பாளையாவில் வசித்து வரும் ராம் பாபு (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய 3 இளம் பெண்களை போலீசார் மீட்டனர்.

ராம்பாபுவிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 700 மற்றும் ஒரு செல்போன், ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியவருக்கு உயிருடன் தீ வைத்த இளைஞர்கள்..!! (வீடியோ)
Next post 60 வயது நடிகருக்கு ஜோடி 20 வயது நாயகியா? மலையாள நடிகை ஆவேசம்..!!