தேர்தல் அதிர்வலைகளும் பிரெக்சிற்றும்..!! (கட்டுரை)

Read Time:7 Minute, 51 Second

image_dfed054dc3ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், யாதொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெறாத நிலையில், பழைமைவாதக் கட்சியை சார்ந்த தற்போதைய பிரதமர் தெரேசா மே, தனது கட்சி சார்பான பிரசாரங்களில் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் தொடர்பான கடும்போக்கானது, கைவிடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் முடிவானது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான ஒப்பந்தம், ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

அண்மையில், ஐக்கிய இராச்சிய உச்ச நீதிமன்றமானது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் தொடர்பான முடிவை நாடாளுமன்றமே மேற்கொள்ளவேண்டும் என தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்தும், கடும்போக்கான பிரெக்சிற் (Hard Brexit) முறைமைக்கு, பழைமைவாத கட்சியிலிருந்தும் ஏனைய கட்சிகளிலிருந்தும் எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்தே, பிரதமர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் , எந்த ஒரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறாத நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, ஐக்கிய இராச்சியம் கடும்போக்காக வெளியேறுவது தொடர்பான பிரதமரின் நிலை, கைவிடப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் பழைமைவாதக் கட்சியினுள்ளேயே முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுகின்றமையும், அதன் ஒரு பகுதியாகவே, குறித்த அதே கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் ,ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் செயலான பிரெக்சிற், சாத்தியமே இல்லை எனத் தெரிவித்திருந்தமையும் அவதானிக்கக்கூடியது.

மேலும், குறித்த பிரெக்சிற்-ஐ நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், குறிப்பாக ஐரோப்பியர்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேறல் தொடர்பான குடியேற்றம் (Immigration) தொடர்பான சட்டமியற்றுதல், ஐரோப்பிய சட்டங்களிலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்றுதல் தொடர்பான சட்டமியற்றுதல், ஐரோப்பிய சட்டங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளிலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்றுதல் தொடர்பான சட்டங்களை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றில் நிறைவேற்றுவதில் அமையப்போகும் மேலதிக சிக்கல்கள், உட்கட்சிப் பூசல்களால் எந்த ஒரு சட்டமூலமும் தோற்கடிக்கப்படாது பாதுகாத்தல் என்பன. குறித்த பிரெக்சிற் செயன்முறையை மேலும் தாமதிக்கப்போகும் விடயங்களாகவே இருப்பதுடன், மேலதிகமாக எவ்வளவு காலம், குறித்த தொங்கு நாடாளுமன்றத்தில் பிரதமர், ஓர் உறுதியான அரசாங்கத்தை வைத்திருக்க முடியும் என்பனவும் கேள்விகளாக அமைகின்றன.

இதற்கு மேலதிகமாக, தொங்கு நாடாளுமன்றில் அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு பிரதமர் மே, வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக சங்கக் கட்சியுடன் (DUP) இணைந்து கொண்டமையும், அது தொடர்பில் குறித்த கட்சி தனது மாற்று நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றமையும், குறித்த அரசாங்கம் அமைக்கப்பெறினும் அது தொடர்பான ஸ்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமையும்.

DUP கட்சித் தலைவர் ஆர்லீன் போஸ்டர் கூறியதாவது: “எவரும், ஒரு கடினமான பிரெக்சிற்றைப் பார்க்க விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான தேசிய வாக்கெடுப்பு என்னவென்றால், அது ஐக்கிய இராச்சியம் சுயாட்சியை கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டுமே ஆகும்” என்பதிலிருந்து, குறித்த கட்சி, பிரதமரின் கடும்போக்கான பிரெக்சிற் சட்ட மூலத்துக்கு எவ்வாறான அழுத்தத்தை வழங்கும் என ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

மேலதிகமாக, நடைபெற்று முடிந்த தேர்தலில் பழைமைவாதக் கட்சிக்கு கிடைத்த 12 ஆசனங்கள், ஸ்கொட்லாந்திலிருந்தே கிடைத்திருந்தது. ஸ்கொட்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல் தொடர்பாக எதிர்மறையான கருத்துகளையே கொண்டிருக்கின்றமை, ஸ்கொட்லாந்து தேசிய கட்சி (Scottish National Party), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலக்கக்கூடாது என்ற தீர்மானத்தில் இருத்தலும், அவ்வாறு விலகும் பட்சத்தில், ஸ்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதலுக்கு மீண்டும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் வைக்கப்படும் என அறிவித்தமையும், குறித்த கட்சியே ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் அறுதிப்பெரும்பான்மையை கொண்டிருத்தலும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரது கடும்போக்கான பிரெக்சிற், ஒரு முடியாத காரியமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வரும் வாரம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடக்க இருக்கும் விலகுதல் தொடர்பான பேச்சுவார்த்தை ஐரோப்பிய – ஐக்கிய இராச்சிய உறவில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகின்றது என்பதற்கு அப்பால், குறித்த பேச்சுவார்த்தையில், ஐக்கிய இராச்சியம், எவ்வாறான ஒரு விலகலை எதிர்பார்க்கின்றது என்பதனையும், பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘திருடன், திருடன்’ என்று கோஷமிட்ட இந்தியர்கள்.. தலை தெறிக்க ஓடிய விஜய் மல்லையா..!! (வீடியோ)
Next post மாட்டேன் என்று சொல்ல மனம் இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன்.. மனம் திறந்த பிரபல நடிகை..!!