அந்தரத்தில் பறந்த கார்: பேருந்துக்குள் விழுந்த பயங்கரம்! பதற வைக்கும் வீடியோ..!!

Read Time:2 Minute, 8 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)ஜப்பானில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து சென்று சுற்றுலா பேருந்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு மோதியதில் கார் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜப்பானில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் இன்று காலை 40 சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, சாலையில் எதிர் பக்கத்திலிருந்து தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு கருப்பு நிற கார் அந்தரத்தில் பறந்தபடி பேருந்தின் முன் பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து காட்சி, பேருந்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

விபத்தில் சிக்கிய காரும், பேருந்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தையடுத்து அந்த சாலை தற்போது மூடப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, சாலையில் இளம் பெண்ணை ஏற்றி கொண்டு சிக்னலில் நிற்காமல் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்றுள்ளது.

இதை கார் ஓட்டுனர் கவனிக்காத நிலையில், அவர் கட்டுபாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்தபடி சென்று விபத்தில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்..!!
Next post உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா’ நடிகர்..!!