பிறரை உரசுவதில் பாலியல் இன்பம் காணுதல்..!!
ஃபிராட்டரிஸம் எனும் சொல் ‘ஃபிராட்டர்’ (“தேய்த்தல்/உரசுதல் என்று பொருள்) எனும் பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. இந்தப் பிரச்சனை உள்ள ஒரு நபர், தன்னை சந்தேகப்படாத வகையில் ஒரு எதிர்பாலினத்தவரின் மீது தனது இனப்பெருக்க உறுப்பைத் தேய்ப்பதன் மூலம் மிகுந்த பாலியல் இன்பம் அடைவார். வழக்கமாக இவர்கள் ஷாப்பிங் மால், பேருந்துகள், இரயில்கள் போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில் இப்படிச் செய்வார்கள்.
இவர்கள் கூட்டமாக இருக்கின்ற, எளிதில் பிறர்மேல் உரசக்கூடிய பொது இடங்களையே தேர்வு செய்வார்கள்.
இது ஏதேனும் ஒரு பொருள், குழந்தைகள் அல்லது விலங்குகளை நோக்கிய இயல்புக்கு மாறான பாலியல் கோளாறாகும். இது நீண்ட காலம் தொடர்ந்தால் அல்லது தீவிரமாக இருந்தால், மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கலாம், தனக்கும் பிறருக்கும் தீங்கையும் ஏற்படுத்தலாம்.
15-25 வயதுடைய ஆண்கள் பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்சனை உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.
காரணங்கள் (Causes)
சிலருக்கு இந்தப் பழக்கம் ஏற்படக் காரணம் இன்னது என்று வரையறுத்துக் கூற முடியாது. தற்செயலாக ஓரிருமுறை இந்த அனுபவத்தை (பிறர்மேல் உரசுவது) அடைந்து அதனால் பாலியல் கிளர்ச்சி அடைந்தவர்கள் பிறகு மீண்டும் மீண்டும் அதில் ஈடுபட ஆர்வம் காட்டுவார்கள் என்றொரு கோட்பாடு விளக்குகிறது.முதலில் தற்செயலாக நடக்கும் இச்செயல் பிறகு பழக்கமாக மாறிவிடுகிறது.
ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
இந்தக் கோளாறை ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகள் இவை என்று தீர்மானிப்பது கடினம். ஒரு சில காரணிகள்:
சமூக விரோத நடத்தை முன்பே இருந்திருப்பது
பாலியலில் வழக்கத்திற்கு மாறான ஆர்வம்
அடிக்கடி, அதீத பாலியல் உந்துதலால் உந்தப்படுதல்
அறிகுறிகளும் அடையாளங்களும் (Signs and symptoms)
ஃபிராட்டரிசம் எனும் இந்தப் பிரச்சனையின் அறிகுறிகள் (DSM 5இன்படி):
ஒருவருடைய சம்மதம் இன்றி, வெறும் பாலியல் இன்பத்திற்காகவே வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் அவரை உரசுதல்
ஒருவரின் சமூக, தொழில்ரீதியான மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நடத்தை
கண்டறிதல் (Diagnosis)
மேலே குறிப்பிட்ட அறிகுறிகளின் அடிப்படையில், ஒருவருக்கு இந்தக் கோளாறு உள்ளதா என்பதை உளவியல் நிபுணர் ஒருவரால் தீர்மானிக்க முடியும்.மேலும், சம்பந்தப்பட்ட நபர் தனக்கும் பிறருக்கும் தீங்கு விளையக் காரணமாகலாம்.
சிகிச்சை (Treatment)
இதில் ஈடுபடும் பலர், தண்டனைக்குப் பயந்து, வேண்டுமென்றே செய்யவில்லை என்று தப்பிக்கப் பார்ப்பார்கள். இதனால் இவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் சிக்கலாகும்.
தானாக முன்வந்து, இந்தக் குறைபாட்டை சரிசெய்துகொள்ள வேண்டும் என்று முயற்சி எடுப்பவர்களுக்கு நடத்தை சிகிச்சை, உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.
நேர்மறையான மற்றும் எதிர்மறையான அறிவுரைகளை வழங்கியும், கருத்துகளை வலியுறுத்திப் பதியவைத்தும், சிந்தனைப் போக்கை மாற்றியும், இது போன்ற சூழ்நிலைகளை சரியாகக் கையாளக் கற்றுக்கொடுத்தும் சம்பந்தப்பட்ட நபரின் நடத்தையை மாற்றுவதே சிகிச்சையின் நோக்கமாக இருக்கும். இவற்றால் தன்னையும் மீறி செயல்படும் பாலியல் உந்துதலை அவர்களால் கட்டுப்படுத்தி நிர்வகிக்க முடியும்.
தடுத்தல் (Prevention)
இந்த நடத்தையைத் தடுக்க என்று வழிமுறைகள் ஏதும் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சிக்கல்கள் (Complications)
இந்தப் பிரச்சனை உள்ள சில நபர்களுக்கு வழக்கத்திற்கு மாறான பாலியல் நடத்தைகள் எனும் பிரச்சனை உண்டாகலாம்.இந்த செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடும்போது சட்டச் சிக்கல்கள், வழக்குகள், பொது இடங்களில் பிரச்சனை, கைகலப்பு, மக்களால் தாக்கப்படுதல் போன்ற பல்வேறு விளைவுகள் ஏற்படலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
இந்தப் பிரச்சனை உள்ள பலருக்கு சிகிச்சையோ மருத்துவ உதவியோ தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ உங்களுக்கோ இந்தப் பிரச்சனை இருந்து, சரி செய்ய வேண்டும் என்று கருதினால், பிரச்சனைகள் எதுவும் வந்துவிடும் முன்பு உளவியல் நிபுணரிடம் சென்று ஆலோசனை பெறவு
Average Rating