சரும பிரச்சனைகளை போக்கும் ஆப்பிள் பேஸ் பேக்..!!

Read Time:2 Minute, 57 Second

201706081341369738_apple-face-pack-for-glowing-skin_SECVPFதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லை. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி………..!

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர், பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து காய்ந்ததும் கழுவி விடவும்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

* ஆப்பிள் சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த்தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

* ஆப்பிள் பழம் ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும். அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.

* ஆப்பிளானது முகப்பரு மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும்.

இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் கொலைவெறியை தூண்டும் இந்த கேள்விகளை தெரியாம கூட கேட்காதீங்க..!!
Next post இப்படியும் கோக்கை use பண்ணலாமா..!! (வீடியோ)