`பாகுபலி’யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்..!!

Read Time:2 Minute, 39 Second

201706071929512603_Prabhas-done-in-Baahubali-Udhayanidhi-to-goes-with_SECVPFதளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் `பொதுவாக எம்மனசுல தங்கம்’. தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் உதயநிதி கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். இன்றைய தலைமுறை கிராமத்திலிருந்து வசதியான இடத்தை நோக்கி போகாமல், இருக்கும் இடத்தை வசதியாக்க வேண்டும் என்ற நோக்கத்தை, கதைகளமாக்கி காமெடி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் இருக்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும், டைகர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரி, உதயநிதி நண்பனாக நடித்திருக்கிறார். மேலும் மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இதில் `பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தில் முக்கிய காட்சியில் பிரபாஸ், சிவ லிங்கத்தை தனது தோளில் தூக்கியபடி செல்வார். அதே போல் இந்த படத்தில் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மனின் சிலையை, உதயநிதி தனது தலைமீது சுமந்து கொண்டு காலில் செருப்பு அணியாமல் கிராமத்தையே சுற்றி வந்து நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் படமாக்கப்பட்டுள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜுன் 9-ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுக்கு மூலநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்..!!
Next post தினமும் உடலுறவில் ஈடுபடலாமா?… அப்படி ஈடுபட்டா என்ன ஆகும்?..!!