அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம்மாற அல்-காய்தா அழைப்பு

Read Time:1 Minute, 53 Second

Al.Haida.1.jpgஅமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம்மாற வேண்டும் என்று அல்-காய்தா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அல்-காய்தா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இரண்டாவது இடம் வகிக்கும் அல்-ஜவாரி என்பவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதுதொடர்பான விடியோ டேப் அண்மையில் வெளியாகியுள்ளது. அல்-காய்தா இயக்கத்தால் கொல்லப்படும் மேலை நாட்டினருக்காக எந்த முஸ்லிமும் வருத்தப்படக் கூடாது என்று அல்-ஜவாரி கூறியுள்ளார்.

இதுஒருபுறம் இருக்க பாகிஸ்தானில் பயிற்சி முகாம்களில் பங்கேற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கதான் என்பவரும் இதேபோன்று அழைப்பு விடுத்துள்ளார். இராக் மற்றும் ஆப்கனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம் மாறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வெற்றிவாகை சூடிவரும் அல்-காய்தாவுக்கு ஆதரவாகச் செயல்படுமாறும் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது பேட்டி இடம்பெற்றுள்ள விடியோ டேப்பில் இந்த அழைப்பு இடம் பெற்றுள்ளது. யூத மற்றும் கிறிஸ்தவ மதத்தில் உள்ள தவறுகளை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதேசமயம் இஸ்லாமிய நெறிகளை அவர் உயர்வுபடுத்தி பாராட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செஞ்சோலை என்பது ஆயுதப் பயிற்சி முகாம்தான்! காயமடைந்த யுவதி உறுதிப்படுத்துகிறார்
Next post தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு…-TMVP பிள்ளையான்