பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்..!!

Read Time:1 Minute, 56 Second

201706051316504168_No-mistake-from-priyanka-chopra-says-sunny-leone_SECVPFசமீபத்தில் பெர்லின் சென்ற பிரதமர் மோடியை, இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அப்போது கால் தெரியும் படி உடை அணிந்து, பிரதமர் முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசினார்.

இது பெரும் விமர்சனத்துக் குள்ளானது. பிரியங்கா சோப்ராவின் இந்த செயலுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், அதில் தவறு இல்லை. என்பது போன்று பிரியங்கா சோப்ராவும், அவருடைய அம்மாவும் கால் தெரியும் படி உடை அணிந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு சன்னிலியோன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி கூறியுள்ள அவர், “ நாம் மிகவும் ஸ்மார்ட் ஆன மனிதரைதான் இந்திய பிரதமராக தேர்வு செய்து இருக்கிறோம். அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். பிரியங்கா உடை அணிந்து சென்றதில் பிரச்சினை இருந்திருந்தால் பிரதமர் நிச்சயம் கூறி இருப்பார். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

எனக்கு பிரியங்காவை நன்றாக தெரியும். அவர் மக்களிடம் நல்ல விதமாக பழகுபவர். சமூகத்துக்கு உதவி செய்பவர். எனவே, அவருடைய நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல” என்று தெரிவித்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாட்டிறைச்சி தடையும் மாநில கட்சிகளின் கூட்டணியும்..!! (கட்டுரை)
Next post ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய வீடியோ..!!