செஞ்சோலை என்பது ஆயுதப் பயிற்சி முகாம்தான்! காயமடைந்த யுவதி உறுதிப்படுத்துகிறார்
கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி விமானத் தாக்குதலுக்குள்ளான செஞ்சோலை எனும் இடம் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் ஆயுதப் பயிற்சி முகாம் என்பது மீண்டுமொரு முறை ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. குறித்த முகாமில் பயிற்சி பெற்ற வேளை விமானத் தாக்குதலின் போது காயங்களுக்குள்ளாகி தப்பித்த மூன்று யுவதிகள் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களில் அந்த முகாம் பற்றிய பல்வேறு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செஞ்சோலை என்பது ஒரு அனாதை இல்லம் என்று புலிகள் கூறி அதன் மீதான படையினரின் தாக்குதலை சர்ச்சைக்குள்ளாக்கி இருந்தனர். எனினும் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஆயுதப் பயிற்சி முகாம் என்றும் அது மிக இனங்காணப்பட்டு, திட்டமிட்டு நடத்தப்பட்டதொரு தாக்குல் என்றும்….
ராணுவத்தினர் பல்வேறு தடவைகள் கூறிவந்தனர். அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அந்த முகாமில் பயிற்சி பெற்ற யுவதிகளே தாக்குதலுக்குள்ளான இடம் ஒரு ஆயுதப் பயிற்சி முகாம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சிறீபதி கஸ்து}ரி (வயது 18) தம்பிமுத்து தயாளினி (வயது 20) மற்றும் பாலசிங்கம் சுனேத்ரா (வயது 19) ஆகியோர் தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஓகஸ்ட் 14ம் திகதி குறித்த முகாமில் பயிற்சி பெற்றவேளை இடம்பெற்ற விமானத் தாக்குதலில் இவர்கள் காயமடைந்தார்கள். பின்னர் இவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டனர்.
பொலிசாருக்கு இந்த யுவதிகள் தெரிவிக்கையில் குறித்த முகாமில் ஏ.கே.47 துப்பாக்கியை பயன்படுத்துவது மற்றும் யுத்ததந்திரங்கள் என்பன போன்ற பல்வேறு ராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் செஞ்சோலை முகாமில் தமக்கு வெந்திலா அக்கா எனும் புலி உறுப்பினர் ஒருவரே பயிற்சிகளை வழங்கியதாகவும் கூறினர்.
இது விடயத்தில் பல்வேறு மாறுபட்ட பார்வைகள் காணப்பட்டன. முன்னர் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் யுனிசெப் போன்றன செஞ்சோலை என்பது ஒரு பாடசாலை என்றும் அங்கு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 61 மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 152 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தன.
ஆனால் அங்கு பயிற்சி பெற்ற கஸ்து}ரியின் தாயாரான சிறீபதி குமுது ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் எல்.ரீ.ரீ.ஈ.யினர் அந்த யுவதிகளை பலாத்காரமாக ஓகஸ்ட் 10ம் திகதி அழைத்துச் சென்றதாக கூறினார்.
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பைச் சேர்ந்த மயூரன் மற்றும் முல்லைத்தீவு கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஐவன் ஆகியோர் ஓகஸ்ட் மாதத்தின் முதலாம் வாரத்தில் எமது பாடசாலைக்கு வந்து அவர்களின் செஞ்சோலை முகாம் பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டினர் என்றார் கஸ்து}ரி. மேலும் கூறுகையில் நாங்கள் பயிற்சிக்குச் செல்லாவிட்டால் எமது பாடசாலைக் கல்வியை இடை நிறுத்தி விடுவதாகவும் அவர்கள் எம்மைப் பயமுறுத்தினர்|| எனவும் தெரிவித்தார்.
அங்கு முதலுதவிப் பயிற்சிகள் மற்றும் ராணுவத்தினரிடமிருந்து எவ்வாறு தப்பிச் செல்வது போன்ற பயிற்சிகளும் தமக்கு வழங்கப்பட்டதாகவும் இந்த யுவதிகள் மேலும் கூறினர்.
கஸ்து}ரி மேலும் தெரிவிக்கையில் அருள்மாஸ்டர் மற்றும் மயூரன் எனும் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் இரண்டு உறுப்பினர்கள் முல்லைத்தீவு பிரதேச கல்விக் காரியாலயத்தில் வேலை செய்கின்றனர். பயிற்சி முகாமில் வெந்திலா அக்கா மற்றும் கலையரசிஅக்கா ஆகியோரே மேற்பார்வையாளர்களாக செயற்பட்டனர். எமது நான்காவது பயிற்சி நாளான ஓகஸ்ட் 14ம் திகதியன்று விமானப் படையினரின் சண்டை விமானங்கள் குண்டு வீச்சை நடத்தின என்றார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த கஸ்து}ரி, கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் பின்னர் வவுனியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.