மருமகளை கற்பழித்த மாமனார்: சுட்டுக் கொன்ற மனைவி..!!

Read Time:2 Minute, 32 Second

201706041655589664_Pakistan-woman-guns-down-hubby-for-molestation-abusing_SECVPFபாகிஸ்தானின் பெஷாவர் மாநிலத்தில் வசித்து வரும் ஒரு வாலிபர் அந்நாட்டு ராணுவத்தில் பயிற்சிபெற்று வருகிறார். பெற்றோருடன் தனது மனைவியை விட்டுவிட்டு அவர் கடமையாற்ற சென்றுவிட்ட நிலையில் வீட்டில் இருந்த அவரது இளம் மனைவியை தனது தந்தை குல்பர் கான் என்பவர் மிரட்டி கற்பழித்துவிட்ட செய்தி அவருக்கு பின்னர் தெரியவந்தது.

இதைகேட்டு மனம் நொந்துப்போன அந்த ராணுவ வீரர், இந்த அக்கிரமத்தை தனது தாயார் பேகம் பீபியிடம் தெரிவித்தார்.

பெற்ற தந்தை என்பதால் அவரை தண்டிக்க எனது மனம் விரும்பவில்லை. இந்த முறை நான் பயிற்சிக்கு சென்றுவிட்டு விடுமுறையில் வரும்போது, நானும் எனது மனைவியும் வேறொரு வீட்டில் தனிக்குடித்தனம் போக தீர்மானித்துள்ளோம் என அவர் தாயாரிடம் கூறினார்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மாமனாரின் அத்துமீறல் அதிகரிக்கவே, பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுதொடர்பாக தனது மாமியாரிடம் முறையிட்டு அழுதுள்ளார். அவரது ஆணவத்தை தட்டிக்கேட்ட மனைவியின் பேச்சை பொருட்படுத்தாத குல்பர் கான், தொடர்ந்து தனது காமக்களியாட்டத்தை நடத்தி வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்தார். குடும்ப உறவுகளையும், பந்தங்களையும் மதிக்க தெரியாததால் அந்த மிருகத்தை நான் சுட்டுக் கொன்றேன் என போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேகம் பீபியை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய பெஷாவர் போலீசார், நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது!! ஆபத்து..!!
Next post ஆண்களே படுக்கையறையில் நீங்கள் செய்யும் 7 தவறுகள்..!!