ரூ.60 லட்சம் மதிப்புடைய ஆடம்பர காரில் நிலத்தை உழுத விவசாயி..!! (வீடியோ)

Read Time:2 Minute, 16 Second

car_agree001.w245விவாசய நிலங்களில் இறங்கி சேற்றில் சக்கரத்தை ஓட்டி, மண்ணை சமன்படுத்தவும், நாத்து நடுவுவதற்கு முன்பு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி கார் செய்தது.

இதை அந்த விவசாயின் நண்பர் ஒருவர் விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகியுள்ளது.

மேலும், அந்த விவசாயிடம் டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ஃபார்ச்சூனர் போன்ற கார்களும் உள்ளதாம்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மிட்சுபிஷி மான்டிரோ காரை எடுத்துக்கொண்டு விவசாய களத்தில் உழவு செய்ய வைத்துவிட்டார்.

தற்போது வட மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருவதால், டிராக்டர்களை பயன்படுத்தி உழுவதற்கு அதிக நேரமாகும். மேலும் வேலையும் வீணாகும். அதை தவிர்க்கவே, பணிகளை துரிதமாக முடிக்க விவசாயி மான்டிரோ எஸ்.யூ.வி காரை பயன்படுத்தியதாக நண்பர் தெரிவித்துள்ளார்.

ரூ.60 லட்சம் விலைக்கொண்ட மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி காரில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜிடு எஞ்சின் உள்ளது. இது 441 என்.எம் டார்க் திறனை வழங்கும். 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஸ்.யூ.வி காரில் 4 சக்கரங்களையும் நான் கட்டுப்படுத்தலாம்.

மேலும் இந்த மாடல் கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12 கி.மீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. சில சூழ்நிலைகளில் மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 கி.மீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீக்கிரம் வெள்ளையாகலாம்.. இதை ட்ரை பண்ணுங்க..!!
Next post தாயின் சடலத்தை தந்தை உதவியுடன் பைக்கில் எடுத்து சென்ற மகன்: மனதை உருக்கும் சம்பவம்..!!