வெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை “ஜில் ஜில்”லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்..!!
வெயில் காலம் வந்தாலே வியர்வை, புழுக்கம் ஆரம்பித்து விடும். உறக்கம் வராமல் தவிப்பவர்கள் படுக்கை அறையில் அரைகுறை உடையோடு உறங்கும் துணையைக் காணும் போதே ஆண்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும்.
அசதியில் உறங்கும் மனைவியை எழுப்ப மனது வராதுதான் இருந்தாலும் சில டிரிக்ஸ்களை பயன்படுத்தினால் மனைவிக்கும் ஆசையை தூண்டலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஹீட்டான படுக்கை அறையை கூல் ஆக்க சில ஜில் ஜில் ஐடியாக்களை அளித்துள்ளனர் காமவியல் நிபுணர்கள்… நீங்களும் டிரை பண்ணி பாருங்க. அப்புறம் தினம் தினம் உங்க வீட்டில் சிம்லா ஸ்பெஷல்தான்.
கொதிக்கும் வெப்பம்
கோடை காலத்தில் அதிக அளவில் ரொமான்ஸ் நடக்கும் காரணம் புழுக்கத்தை தடுக்க படுக்கை அறையில் குறைவான ஆடைகள் அணிவதே என்கிறது ஒரு ஆய்வு. வெப்பத்தின் தகிப்பு ஒருபக்கம் இருக்க புழுக்கம் வாட்டி வதைக்க, துணையின் குறைவான ஆடை ஒருவித உற்சாக மூடினை வரவழைக்கும். எனவே துணையை தயார் படுத்த ஜில் என்று யோசியுங்கள்.
குளியலறை உறவு
புழுக்கத்தை போக்க குளியல் அவசியம்… தனியாக குளிப்பதை விட துணையோடு குளித்தால் தனியான சுகம்தான். அதுவும் ஷவரில் இருந்து மெல்லிய மழையால் தண்ணீர் விழும் போது துணையை தழுவிக்கொண்டே குளிப்பது, உறவுக்கு உற்சாகமாக தயார்படுத்தும்.
தண்ணீர் பழங்கள்
ஐஸ் க்யூப் எல்லாம் பழைய டிரிக்… அது குளுமையான விசயம்தான். ஆனாலும் மெல்லிய ஆடையில் துணை இருக்கும் போது, தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை என தண்ணீர் நிறைந்த பழங்களை துணையின் மீது வைக்கும் போதே ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தும். அதை மெதுவாக ஒவ்வொன்றாக சுவைத்து சாப்பிடும் போது லேசாக உடலின் மீது படும் உதடுகள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தும். அப்புறம் என்ன உங்கள் துணை கிறங்கித்தான் போவார்.
மெல்லிய மசாஜ்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் லேசான கட்டிகள் வியர்குரு போன்றவை துணையில் உடலில் தோன்றியிருக்கும். அந்த எரிச்சலை போக்க அதற்கென உள்ள ஜில் பவுடரை உடல் முழுவதும் தூவி மெதுவாக தடவி ரொமான்ஸ் மூடை உருவாக்கலாம். அப்புறம் என்ன உடல் குளிர்ச்சி ஒருபக்கம் மறுப்பக்கம் உறவுக்கு தயாராகி விடுவார் உங்கள் துணை.
நனைத்த டவல்
மெல்லிய வெண்மை நிற டவலை தண்ணீரை நனைத்து அதை நன்றாக பிழிந்து படுக்கை அறையில் வைத்திருக்கலாம். துணையின் உடல் முழுவதும் இந்த துணியை வைத்து லேசாக துடைத்து விடலாம். வெப்பத்திற்கு இதமாக உடலில் ஒருவித குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதே நேரத்தில் கிளர்ச்சியை உருவாக்கும். அப்புறம் என்ன இந்த டிரிக்ஸ்ஐ உபயோகித்து உங்கள் துணையை உற்சாகப்படுத்துங்கள்… உங்கள் படுக்கை அறையில் இனி குலு மனாலி கோலாகலம்தான்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating