உறவில் விரிசல் ஏற்படுவதற்கான 6 காரணங்கள்..!!

Read Time:4 Minute, 12 Second

728x410_9809_love-450x300முதல் நாளில் பார்த்து இரண்டாம் நாளில் காதலை சொல்லி, மூன்றாம் நாள் திருமணத்தில் முடியும் நிலை தான் தற்போது அதிகமாக உள்ளது.

இதுபோன்று ஏற்படும் உறவுமுறையின் ஆயுள் வெகு சீக்கிரத்திலேயே முடிந்துள்ளது. குடும்ப உறவில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு காரணம் குறித்து ஆராய்சி ஒன்றும் செய்யத்தேவையில்லை, மாறாக நம்மிடம் மறைந்திருக்கும் சில அடிப்படையான பழக்கவழக்கங்களே காரணம் ஆகும்.

அதுகுறித்து பார்ப்போம்,

ஈகோ

குடும்பத்திற்குள் நீ பெரியவளா? நான் பெரியவனா? என்ற போட்டிபோடும் மனப்பான்மை வந்துவிடக்கூடாது. இந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடாது, எனது கணவன் மனைவி ஆகிய இருவருக்குள்ளும் தெரிந்த மற்றும் தெரியாத விடயங்களை பகிர்ந்து கொண்டு வாழ்க்கை வாழ வேண்டும்.

தவறாக புரிந்துகொள்ளுதல்

குடும்ப வாழ்க்கையில் எந்த ஒரு விடயத்தையும் தவறாக புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டால், அது நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல, நமக்கும் பிரச்சனைதான். நாம் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை என்று எண்ணம் மேலோங்கி அனைவருடனும் சண்டையிட ஆரம்பிப்போம். எனவே, நம்மை எவ்வாறு மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறோமோ, அதே போன்று மற்றவர்களின் உணர்வுகளையும் சரியான முறையில் புரிந்துகொள்ளுங்கள்.

பொஸசிவ்னஸ்

அளவு கடந்த அன்பு எப்போதும் ஆபத்தில் தான் முடியும். இந்த பொஸசிவ்னஸ் வாழ்க்கையின் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். எனவே எல்லாம் நமக்கும் மட்டும் தான் என்று சண்டையிடுவதை விட, அந்த இடத்தில் நமது உறவின் முக்கியத்துவம் என்ன என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள்.

சந்தேகம்

குதூகலமான குடும்பத்தை கும்மியடிப்பது இந்த சந்தேகம் தான். இந்த சந்தேகம் மட்டும் மனதிற்குள் வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும், இதற்கு ஒரே வழி மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை வெளிப்படையாக பேசி அதற்கான தீர்வை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மூன்றாம் நபர்

குடும்ப உறவில் மூன்றாவது நபர் என்பவர் என்றைக்குமே மூன்றாவது நபராகத்தான் இருக்க வேண்டும், குடும்ப விடயங்கள் பற்றி அவர்களிடம் பகிர்ந்துகொள்வதை அளவாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அவர்கள் என்னதான் நல்லது செய்தாலும், அவர்களால் உங்களுக்கு எந்த நேரத்திலும் பிரச்சனை ஏற்படலாம்.

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பொறுமையும் உள்ளவர்கள் யாரிடமும் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை, குடும்பத்திற்குள் சண்டை வந்தால் ஒருநாளில் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவிதான் இறங்கி வரவேண்டும் என்று அவசியம் இல்லை, இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும்; மற்றவர் தானாக சமாதானம் ஆகிவிடுவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் சினிமாவை கிழித்து தொங்கவிட்ட ராஜா.. மனுஷன் இப்படி பேசிட்டாரே..!! (வீடியோ)
Next post வெற்றிலை மிளகு போதும்: 8 வாரத்தில் எடையில் மாற்றம்..!!