முகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவை..!!

Read Time:3 Minute, 42 Second

201705301007262272_skin-face-mask_SECVPFமுகம் எப்போதும் பொலிவுடன் தோன்ற வேண்டும். முகம் சோர்வாக காணப்படுபவர்களிடம் சுறுசுறுப்பு எட்டிப்பார்க்காது. கடுமையான வேலை செய்து களைத்து போய் இருப்பவர்களிடமும் புத்துணர்ச்சி கரைந்து போயிருக்கும். முக பொலிவுக்கும், சோர்வுக்கும் தொடர்பு இருக்கிறது. சோர்வாக காட்சியளிப்பவர்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதன் மூலம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொதுவாக தண்ணீரில் முகம் கழுவினாலே முகத்தில் தென்படும் சோர்வு விலகத் தொடங்கும்.

பயணங்கள் மேற்கொண்ட களைப்புடன் வீடு திரும்புபவர்களும் பயணத்திற்கு தயாராகிறவர்களும் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும். குளிக்கும்போது கடலை மாவை முகத்தில் பூசி கழுவினால் முகம் பளபளப்பாகும். கடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவது அதிக பொலிவு தரும்.

சருமம் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தால் கடலை மாவுடன் தயிர், எலுமிச்சை சாறு கலந்து குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும். உஷ்ணத்தால் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கவும் கடலை மாவை பயன்படுத்தலாம். அதனுடன் காய்ச்சிய பாலை குழைத்து முகத்தில் பூச வேண்டும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பிரகாசமாக மின்னும். முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கும்.

முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும். கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க தயிரை முகத்தில் பூசி வரலாம். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் சருமம் புதுப்பொலிவு பெறும்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் பெண்களின் முகம் ஜொலிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரல்களால் சூடேற்றி விடிய விடிய விளையாடலாம் வா..!!
Next post 9 ஆம் வகுப்பு மாணவியை பள்ளியின் மேள் தளத்திலிருந்து தூக்கி எரிந்த ஆசிரியர்கள்: அதிர்ச்சியான காரணம்..!!