பெண்களே! நீங்கள் புடவையில் அழகாக தெரிய வேண்டுமென்றால்… அணியும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…..!!

Read Time:3 Minute, 57 Second

saree_handback001.w540நம் நாட்டின் பாரம்பரிய உடை தான் புடவை. தற்போதைய தலைமுறையினர் பலருக்கும் புடவை அணியவே தெரியாது. இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரம் நம் நாட்டிற்கு புகுந்தது தான். இதனால் உடுத்தும் புடவையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்து, புடவையின் அழகையே பாழாக்கிவிடுகின்றனர். எனவே புடவையில் அம்சமாக காட்சியளிக்க வேண்டுமானால், புடவை அணியும் போது நினைவில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேலாவது புடவையை சரியாக உடுத்துங்கள்.
அளவுக்கு அதிகமான ஆபரணங்கள்

புடவையில் அழகாக காட்சியளிக்க விரும்பினால், அதற்கு அதிகமான அளவில் ஆபரணங்களை அணிய வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால், அப்படி அதிகமாக ஆபரணங்கள் அணிந்தால், அது தோற்றத்தையே பாழாக்கிவிடும். வேண்டுமானால், புடவைக்கு முத்துக்கள், கற்கள் அல்லது சிறிய பென்டென்ட் செட்டுகள் போன்று அணியலாம்.

உடுத்தும் முறை

புடவையை அணியும் போது, தொப்புளுக்கு மிகவும் கீழேயோ அல்லது மேலேயோ அணியக்கூடாது. இதுவும் புடவையின் தோற்றத்தையே பாழாக்கும். எனவே சரியான அளவில் பாவாடையை கட்டி உடுத்துங்கள்.

ஹேண்ட் பேக்குகள்

புடவையை அணிந்தால் கட்டாயம் ஹேண்ட் பேக்குகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை. ஒருவேளை ஹேண்ட் பேக் வேண்டுமானால், மிகப்பெரிய அளவிலான ஹேண்ட் பேக்குகளைத் தேர்ந்தெடுக்காமல், சிறிய அளவிலானதை தேர்ந்தெடுத்து கொண்டு செல்லுங்கள்.

தவறான காலணிகள்

புடவையை அணியும் போது, தட்டையான செருப்புக்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இது புடவையில் உங்களது தோற்றத்தையே மோசமாக காட்டும். ஆகவே சற்று உயரமான, அதுவும் ஒரளவு ஹீல்ஸ் கொண்ட காலணியை அணியுங்கள்.

உள்பாவாடை

புடவையை அணியும் போது உடுத்தும் உள் பாவாடை, புடவையின் நிறத்திற்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்து தேர்ந்தெடுத்து உடுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே உங்கள் புடவையின் அழகு மட்டுமின்றி, உங்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கும்.

பிரா ஸ்ட்ராப்கள்

எவ்வளவு தான் பிரா ஸ்டைலாக இருந்தாலும், புடவையில் அது தெரிந்தால், கேவலமாக இருக்கும். எனவே ஜாக்கெட்டுக்களை அணியும் போது, அதை சரியாக உள்ளே தள்ளிக் கொள்ளுங்கள்.

ஜாக்கெட்டுகள்

புடவையில் ஒருவரை அழகாக காண்பிப்பதில் ஜாக்கெட் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே அணியும் ஜாக்கெட் மிகவும் தளர்ந்து இல்லாமல், சரியான அளவில் இருக்குமாறு தைத்து உடுத்துங்கள். அதேப் போல் புடவைக்கு ஏற்ற ஸ்டைலில் ஜாக்கெட்டுகளைத் தைத்து போடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்..!!
Next post தாகத்தின் உச்சக்கட்டம்… தாகம் தீர்க்க வந்த பாம்பின் பரிதாபநிலை..!! (வீடியோ)