அமெரிக்காவை அதிர வைத்த தமிழன் உணவு! வெளிநாட்டவருக்கு தெரியுது, நமக்கு தெரியலையே..!!

Read Time:2 Minute, 17 Second

palaya_satham001.w245அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவில் வந்த ஆய்வறிக்கையைப் பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல… அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? தமிழனின் பண்டைய உணவான “பழைய சோறு” தான் அவர்கள் வியப்பிற்கு காரணம்.

ஆராய்ச்சியில் பழைய சோற்றில் என்னென்ன சக்திகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.

3.உடல் சோர்வைப் போக்குகிறது.

4.உடலில் உள்ள அணுச்சிதைவுகளைத் தடுக்கிறது.

5.உடல் சூட்டைத் தணிக்கிறது.

6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.

7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.

8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் “HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் நாம் தான் இதைத் தின்னால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்குப் “பழையதை” பழித்து வருகிறோம். அது பெரிய தவறு!!

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம், உடல் நலத்தைப் பேணுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?..!!
Next post நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகியாக நடிக்கும் நமீதா..!!