துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதித்த கட்டப்பஞ்சாயத்து..!!

Read Time:2 Minute, 6 Second

abuse (28)பாகிஸ்தான் நாட்டில் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்ய கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ராஜன்புர் என்ற கிராமம். மத அடிப்படைவாதம் நிறைந்த இந்த கிராமத்தில்

பெண்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 19 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினருடன் முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு மரண தண்டனை (கல்லால் அடித்து கொல்லுதல்) விதித்து அக்கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டது.

ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த பெண் தூங்கும் சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த உறவுக்கார இளைஞன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அந்த பெண்ணை கற்பழித்துள்ளான். மேலும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

நடந்த உண்மையை அந்த பெண் பஞ்சாயத்தில் கூறியும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடிய அந்த பெண் போலீசில் சென்று புகாரளித்தார். புகாரின் பேரில் கிராம பஞ்சாயத்துதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதுகாப்பான அரசு விடுதியில் அந்த பெண்ணை தங்க வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியது ஏன்?: ஸ்ருதிஹாசன் விளக்கம்..!!
Next post அனுஷ்கா கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் இந்தி பட இயக்குனர்..!!