அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மவுரஸ்மோ, ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Read Time:3 Minute, 46 Second

Tennis.jpgஇந்த ஆண்டியின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் 7-வது நாளான நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான நடால் தென் ஆப்பிரிக்க வீரர் வெஸ்லிமோடியுடன் மோதினார்.

இதில் நடால் 6-4, 7-6, 7-6 என்ற நேர் செட்டியில் வெற்றி பெற்றார். மற்ற ஆட்டங்களில் ரோட்டிக் (அமெரிக்கா) 6-7, 6-3, 6-4, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் போராடி பெர்னாண்டோவையும் (ஸ்பெயின்) ரோஜர்பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்டில் வின் சென்ட்யையும் (அமெரிக்கா) தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

பெண்களுக்கான ஒற்றை யர் பிரிவு 3-வது சுற்று ஆட்டங்களில் உலகில் முதல் நிலை விராங்கனையான அமேலி மவுரஸ்மோ, இத்தாலி வீராங்கனை மரா சன்டேங்கலோவுடன் மோதினார். இதில் மவுரஸ்மோ 6-3, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் மராவை வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் முன்னணி வீராங்கனையும் 3-வது இடத்தில் உள்ளவருமான மரியா ஷரபோவா தனது சகநாட்டு வீராங்கனையான எலீனாவை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அனா இவானோவிக்கையும் (செர்பியா) லின்ட்சே டேவன் போர்ட் (அமெரிக்கா), கத்ரினாவை (சுலோவேனியா) 3-6, 6-3, 7-6 என்ற கணக்கிலும் தோற்கடித்தனர்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), மார்ட்டின்டம் (செக்குடியரசு) அலாக்சாண்டர் பெயா (ஆஸ்திரியா), பிஜோர் பாகு (ஜெர்மனி) ஜோடியை 6-3, 7-6 என்ற நேர் செட்டில் வீழ்த்தியது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா வின் சானியா மிர்சா, ஹேப்பர் (தென் ஆப்பிரிக்கா) ஜோடி, மரியா (ஸ்பெயின்), அலோரா (பிரான்ஸ்) ஜோடி யுடன் மோதியது. இதில் சானியா ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டது.

ஆனால் சானியாமிர்சா கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். சானியா, பாவல்ட் (செக்குடியரசு) ஜோடி 2-6, 3-6 என்ற நேர்செட்டில் கத்ரினா (சுவோலேனியா), ஜிம்மோன்ஜிக் (செர்பியா) ஜோடியிடம் தோல்வி அடைந் தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆஸி: ‘குரோகோடைல் ஹன்டர்’ விபத்தில் பலி
Next post அல்-காய்தாவின் 2-ம் நிலை தலைவர் இராக்கில் கைது