`காலா’ படத்தில் இரு ஹீரோயின்கள்: ரஜினி ஜோடி யார்?..!!

Read Time:2 Minute, 54 Second

201705271447586738_Kaala-Have-two-actress-who-is-for-rajini-pair_SECVPF`கபாலி’ பட வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் கூட்டணி `காலா’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

நேற்று முன்தினம் வெளியான `காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரிகாலன் என்று பெயருடைய ரஜினியை சுருக்கமாக காலா என்று அழைப்பதால் இப்படத்திற்கு `காலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை தாராவில் வாழும் ஒரு தென்னிந்திய தமிழனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதற்காக சென்னை பூந்தமல்லி அருகே பிரபல ஸ்டூடியோவில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

படத்தில் இடம்பெறும் பிரபலங்கள் யார் யார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே வெளியிடப்பட்டது. இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர `காலா’ படத்தில் ஹூமா குரோஷி நடிக்கிறாரா? அல்லது அஞ்சலி பாட்டீல் நடிக்கிறாரா? என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. `காலா’ படத்தில் நடிப்பதை, அஞ்சலி பாட்டீல் அவரது டுவிட்டர் பக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதேநேரத்தில் ஹூமா குரோஷியும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, `காலா’ படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதே நேரத்தில் ஹூமா குரோஷி ரஜினி ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீருக்காக பல பெண்களை திருமணம் செய்யும் கிராம ஆண்கள்..!! (வீடியோ)
Next post கணவனின் கள்ளக்காதலியை பிடிக்க… மனைவி செய்த காரியம்! அட புதுசா இருக்கே?..!!