ஆணை முழுமையாக உணர வைக்க பெண்கள் என்னென்ன ரொமேண்டிக் வேலைகள் செய்யலாம்?..!!

Read Time:4 Minute, 26 Second

R.mp4_snapshot_08.27_2016.05.19_03.53.53-450x279ஆண்கள் பொதுவாக யாரிடமும் குறிப்பாக பெண்களிடம் தனக்கு வேண்டிய உதவிகளை கேட்கமாட்டார்கள். தனது பிரச்சனைகளை முழுமையாக கூறமாட்டார்கள். உங்களது அன்பு அவருக்கு முழுமையாக கிடைத்தால் மட்டுமே அவர் தனது கஷ்டங்களை உங்களிடம் கூறுவார்.

உங்களது கணவருக்கு உங்கள் அன்பு அதிகம் தேவைப்படுகிறதா? அப்போது அதை கொடுக்க வேண்டியது தானே? நீங்கள் அவரை முழுமையாக காதலித்தால், அவர் உங்களை மிக அதிகமாக காதலிப்பார். அது அவரை ஒரு முழுமையான, திருப்தியான ஆணாக உணர வைக்கும்.

இது வெளியில் அவர் கம்பீரமாக தலை நிமிர்ந்து நடக்க உதவியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் திறமையாக செய்வார். சரி, எப்படி அவரை முழுமையான ஆணாக உணர வைப்பது என பார்ப்போம்.

அவரது விருப்பமான உணவை சமையுங்கள்
உங்கள் காதலனிடம் அவருக்கு விருப்பமான உணவு என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டு அதை அவருக்கு பிடித்த ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடுங்கள்.

உதாரணமாக நீங்கள் தென்னிந்தியர், அவர் வட இந்தியர் என்றால், அவரது சந்தோஷத்திற்காக வட இந்திய உணவை நீங்கள் சாப்பிடுங்கள். அவர் மிகவும் குஷியாகிவிடுவார்.

ஸ்டைலான உடை
ஆண்கள் தன் மனைவி அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர் உங்களை பார்ட்டிகளுக்கு அல்லது திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்லும் போது, மிக நேர்த்தியான ஸ்டைலான உடையில் செல்லுங்கள். அங்கே இருக்கும் அனைவரது கண்களும் உங்க ஜோடி பொருத்தத்தை இரசித்தால், அவருக்கு ஒரு கர்வம் பிறக்கும்.

பிடித்த உணவு
வாரத்தில் ஒரு முறையாவது அவருக்கு பிடித்த உணவை சமைத்து, அதை உங்கள் கையாலேயே ஊட்டியும் விடுங்கள். இது அவரது மனமும், வயிறும் ஒன்றாக நிறைய மிக சிறந்த வழியாகும். நீங்கள் அவருக்காக சமைத்து அன்புடன் ஊட்டிவிடும் போது, அவர் ஒரு மிகச்சிறந்த ஆணாக தன்னை உணர்வார்.

அவரது கனவை அடைய உதவுங்கள்
பெண்கள் ஒரு ஆணின் கனவுகளை தனது கனவாக நினைத்துக்கொண்டு, வெற்றி பெற உதவும் போது ஆணுக்கு அது ஒரு யானை பலத்தை தரும். அவர் உங்களிடம் தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் கனவுகள் பற்றி பேசும் போது ஆர்வமாக கேளுங்கள். அவரை ஊக்குவியுங்கள்.

அவரது கையில் பொறுப்பை கொடுங்கள்
சில விஷயங்களில் அவரை நம்பி முழு பொறுப்பையும் ஒப்படையுங்கள். அவரது விருப்பப்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இது அவர் செய்யும் செயலில் முன்பை விட அதிக கவனமாக ஈடுபட வைக்கும்.

படுக்கை அறை அவரது பொறுப்பு
படுக்கை அறையில் அதிகமாக வேண்டாத விஷயத்தை பேசுவது, அழுவது வேண்டாம். ஒரு ஆணை முழுமையாக உணர வைக்க படுக்கை அறை ஒரு சிறந்த இடமாகும்.

மசாஜ் செய்து விடுங்கள்
மசாஜ் செய்வதால் அதிக ஆரோக்கியமான பலன்கள் இருக்கின்றன. அதை விட நீங்கள் அன்பாக அவருக்கு மசாஜ் செய்து விடுவது அவரை உச்ச கட்ட சந்தோஷத்திற்கு எடுத்து செல்லும். நீங்கள் உடல் முழுவதும் நறுமண எண்ணெய்யை கொண்டு, மசாஜ் செய்து விடும் போது உங்கள் அன்பில் அவர் தன்னை ஒரு முழு ஆணாக உணர்வார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் மாட்டிக்கொண்ட நடிகர்..!!
Next post தலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ..!!