மங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க..!!

Read Time:4 Minute, 0 Second

201705251138213366_skin-problem-control-turmeric-mask_SECVPFமஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போல் இல்லாமல் இப்போது பெண்கள் வெளியே வெய்யிலில் அலைய வேண்டியதாகிறது.

வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும்.

அதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை மஞ்சள் பேக் முறியடிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தந்து சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம் :

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் – அரை ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
பால் – 3 டீஸ்பூன்

கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் பேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது. வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுத்து சருமத்தை பாதுகாக்கும்.

* வேனல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள், சந்தனத்தை அரைத்துப் பற்று போடலாம்.

* பாதத்தில் ஏற்படும் வெடிப்புக்கும் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்துப் பூசினால், சட்டென சரியாகும்.

* கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்துக் குளித்தால், தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

* கோடைக் காலத்தில் மஞ்சள் பூசுவதால், சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

* பசும் மஞ்சள் கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஃபேஷியல் பேக் போட்டுவர, மாசு மரு இல்லாமல் முகம் பளிச்சென மாறும்.

* கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து, பச்சைப் பயறு மாவு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்துவர, சருமத்தில் நிறம் கூடும்.

* மஞ்சளைக்கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது. வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் அரைத்து பூசிக் குளிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.

* பாக்கெட்டில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. பசும் மஞ்சள் கிழங்காக வாங்கி அரைத்துக் குளிப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ்ஸில் பெண்கள் முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள்..!!!
Next post கிசுகிசு வந்தால் சந்தோசம் தான்.. நடிகை தான்யா கலகல பேட்டி..!!