தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்..!!
ஒரு சோகமான உண்மை என்னவென்றால் இன்றைய காலகட்டத்தில் கூட பலர் தவறான உறவில் வாழ்ந்துவருவது தான். தவறான உறவு என்று தெரிந்தும், பலர் உறவை முறிக்க முன்வந்தால், தன் துணையிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வரும் என பயந்தே வாழ்க்கை முழுவதையையும் அவருடனே கழித்துவிடுவது தான். இதை விட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. தவறான உறவு என தெரிந்தால் அதை விட்டு வெளியே வருவதே சிறந்தது. நீங்கள் தவறான உறவில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில காரணங்கள்.
1. உங்களை தன் தனிப்பட்ட சொத்து என கருதுதல் உங்களிடம் ஒரு உயிரற்ற பொருளிடம் நடந்து கொள்வதை போல நடந்து கொள்வார். நீங்கள் ஒரு மனிதர், உங்களுக்கென உணர்ச்சிகள், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இருப்பதை மறந்து, நான் சொல்வதை மட்டும் தான் நீ செய்ய வேண்டும் என்பது போல நடந்து கொள்வார். இது நீங்கள் தவறான உறவில் இருப்பதை குறிக்கிறது.
2. தவறான நடத்தையை சகித்து வாழ்தல் தவறான உறவில் குருட்டுத்தனமாக வாழ்வதை தவிர்க வேண்டும். நீங்கள் தனியாக வாழ பிடிக்காத ஒரே காரணத்திற்காக உங்களது துணை செய்யும் மன்னிக்க முடியாத தவறுகள் அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்வது, நீங்கள் ஒருவருடன் தவறான உறவில் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.
3. அதிகமான பொறாமை உறவுகளுக்குள் பொறாமை என்பது வழக்கமானது. ஜோடிகளுக்குள் சின்ன பொறாமைகள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வருவது ஏற்றக்கொள்ளக்கூடியது. ஆனால் எந்த ஒரு காரணமும் இன்றி உங்களது துணை அளவுக்கு அதிகமாக உங்கள் மீது பொறாமைப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
4. கட்டுப்பாடுகள் விதித்தல் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் உங்களை கட்டுப்படுத்துவது. உங்களது சுதந்திரத்தை பறித்துக்கொள்வது போன்று உங்களுக்கு பல தடைகளை விதிப்பது. உங்களை சுயமாக முடிவெடுக்கவிடாமல் தடுப்பது போன்றவை நீங்கள் தவறான உறவில் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.
5. நியாமற்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவரும் அவர்களது துணையிடம் எதிர்பார்ப்புடன் இருப்பது நியாயமான ஒன்று தான். ஒரு எதிர்பார்பானது சாத்தியமானதாகவும், யதார்த்தமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் நியாயமில்லாமல், தகுதிக்கு மீறி எதிர்பார்த்து உங்களை தோல்வியிலும், மன அழுத்தத்திலும் தள்ளுவது நீங்கள் தவறான உறவில் இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.
6. உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்துதல் உங்கள் துணை உங்களின் அனைத்து உறவுகளிடம் இருந்தும் தனிமைப்படுத்தி, உங்களுக்கு ஒரு உதவி செய்யக்கூட யாரும் இல்லாதவாறு செய்கிறாரா? அப்படியானால் இது நீங்கள் தவறான உறவில் இருப்பதற்கான அறிகுறி.
7. உடல் ரீதியான துன்புறுத்தல் உறவுகளில் உடல் ரீதியான கொடுமைகளுக்கு இடம் கொடுக்கவே கூடாது. உங்கள் துணை அடிக்கடி உங்களை அடிப்பது, உடலில் காயங்களை ஏற்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டால் நீங்கள் கண்மூடித்தனமாக தவறான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
Average Rating